MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • எதிரிக்கு எதிரி நண்பன்... ஒ.பி.எஸ் எண்ட்ரியால் ரணகளப்படும் தேனி திமுக..!

எதிரிக்கு எதிரி நண்பன்... ஒ.பி.எஸ் எண்ட்ரியால் ரணகளப்படும் தேனி திமுக..!

ஓபிஎஸ் எம்.எல்.ஏ வாகி திமுக திரும்ப ஆட்சி அமைத்தால் சபாநாயகர், அல்லது முக்கிய பதவியில் இடம்பெறுவார் என்பதால் ஓபிஎஸை சுற்றி சுற்றி சாதி சங்கங்கள், சமூக அமைப்புகள் என ஒரு பெரும் கூட்டம் எப்போதும் ஓபிஎஸை பார்க்க வந்து கொண்டே இருக்கிறார்கள்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 05 2026, 02:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஓ.பி.எஸ் மீது அதிமுக அட்டாக்
Image Credit : Asianet News

ஓ.பி.எஸ் மீது அதிமுக அட்டாக்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது அணியினர் திமுகவில் இணைவதற்கான விழா பிரமாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. மதுரை - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் அடுத்த ராயபாளையம் விலக்கு பகுதியில், வரும் 7ம் தேதி இந்த விழா நடக்க இருக்கிறது.

விழாவில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதற்கிடையே தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அதிமுகவுக்கே திரும்பி வருகின்றனர். அதிமுகவின் அனைத்து வளங்களையும் அனுபவித்த ஓபிஎஸ் தற்போது கலைஞர், தளபதி, குட்டி தளபதி, குட்டி குட்டி தளபதி என்று கூறுகிறார். காரில் இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை எடுத்து விட்டார். கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை வெட்டி எடுத்துட்டார். ஆனால் அவருடைய கார், அவர் வீடு இதெல்லாம் எங்கிருந்து வந்தது..? எனக் கொந்தளிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
போடி தொகுதி செண்டிமெண்ட்
Image Credit : Asianet News

போடி தொகுதி செண்டிமெண்ட்

க.மயிலை தெற்கு ஒன்றியத்தில் உள்ள 18 கிளைச் செயலாளர்களும் ஓபிஎஸ் அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி அதிமுகவில் இணைந்தனர். குமணன்தொழு, வனத்தாய்புரம், மண்ணூத்து, சென்றாயபுரம், தேவேந்திரபுரம், கோம்பைத்தொழு, முத்துலாபுரம், வலம்புரி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த கிளைச் செயலாளர்கள் விலகியதால் இப்பகுதியில் ஓபிஎஸ் கூடாரம் முற்றிலும் காலி.

தேனியில் ஆதரவாளர்கள் இல்லாமல் தனித்து இருந்த ஓபிஎஸ் இப்போது ஒரு அமைச்சருக்காண் கெத்துடன் எப்போதும் கட்சிகாரர்கள், ஜாதி சங்க பிரமுகர்கள் என்ன பிசியாக வலம் வருகிறார். போடி தொகுதியில் 2021ல் மூன்றாவது முறையாக ஓபிஎஸ் போட்டியிட்டபோது இரண்டு முறைக்கு மேல் போடியில் போட்டியிட்டவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது என்பது தான் தொகுதியின் செண்டிமெண்ட் என சொல்லி இருக்கிறார்கள்.

34
எதிரியுடன் கைகோர்த்த ஓபிஎஸ்
Image Credit : X

எதிரியுடன் கைகோர்த்த ஓபிஎஸ்

அதையெல்லாம் மீறித்தான் அங்கே போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஓபிஎஸ். ஆனால், போடி செண்டிமெண்ட் ஓபிஎஸை ஆளாக்கிய அண்ணா திமுகவில் இருந்து அவரை துரத்திவிட்டு இருக்கிறது. தற்போது புது ஆளாக புது கட்சியில் அதே போடி தொகுதியில் போட்டியிட முடிவு எடுத்திருக்கிறார் என்கிறார்கள். ஓபிஎஸ் திமுகவில் இணையாதவரை போடி தொகுடியின் திமுக வேட்பாளராக போடி மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ள லட்சுமணனை களமிறக்க திமுக மேலிடம் உறுதி செய்து இருந்தது. அவரும் தொகுதியில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பிக்க, ஓபிஎஸ் வரவால் லட்சுமணனுக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே ஓபிஎஸ் அதிமுகவில் இருந்தபோது இண்டு முறை லட்சுமணனை போட்டியில் தோற்கடித்துள்ளார். இப்போது திமுகவுக்குள் வந்து மீண்டும் லட்சுமணனுக்கு எதிராக ஓபிஎஸ் நிற்கிற மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள தங்கச் தமிழ்ச்செல்வனுக்கும், ஓபிஎஸுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருந்து வன்தது. ஆனால், இப்போது ஓபிஎஸ் திமுகவில் இணைந்த பிறகு இருவரும் கசப்பை மறந்து ஒட்டுறவாக உடன்பிறப்புகளாக மாறிவிட்டார்கள்.

44
திமுகவில் கூடும் மவுசு
Image Credit : Asianet News

திமுகவில் கூடும் மவுசு

மாவட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு எதிரான நிலைப்பாட்டில் லட்சுமணன் இருப்பதால் அவருக்கு எதிராக ஓபிஎஸுடன் தங்க தமிழ்ச்செல்வன் கைகோர்த்துவிட்டார் என்கிறார்கள். ஓபிஎஸ் எம்.எல்.ஏ வாகி திமுக திரும்ப ஆட்சி அமைத்தால் சபாநாயகர், அல்லது முக்கிய பதவியில் இடம்பெறுவார் என்பதால் ஓபிஎஸை சுற்றி சுற்றி சாதி சங்கங்கள், சமூக அமைப்புகள் என ஒரு பெரும் கூட்டம் எப்போதும் ஓபிஎஸை பார்க்க வந்து கொண்டே இருக்கிறார்கள். அதிமுகவில் ஓபிஎஸ் இருந்ததை விட இப்போது அவரை சுற்றி திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கூடவே இருந்து வருகிறார்கள்.

About the Author

TR
Thiraviya raj
ஓ. பன்னீர்செல்வம் - அதிமுக
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Recommended image2
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Recommended image3
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Related Stories
Recommended image1
லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.. ஐந்து நாள் பயிற்சி போதும்.. உங்க லைஃப் டோட்டலாக மாறிவிடும்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved