MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!

முதலமைச்சர் விஜய், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களை தவெகவில் சேர்க்க வேண்டாம் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிது. அப்போ ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு அல்வாதானா.!

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 29 2026, 01:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கடும் உத்தரவிட்ட முதலமைச்சர்.!
Image Credit : Asianet News

கடும் உத்தரவிட்ட முதலமைச்சர்.!

தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, தற்போது முதலமைச்சராக முத்திரை பதித்து வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். 2026 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தவெகவின் ஆட்சி தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை நோக்கி, மாற்றுக்கட்சியினர்—குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்—படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து பல விக்கெட்டுகள் தவெக பக்கம் சாய்ந்து வரும் நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் அதவ் அர்ஜுனா ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் அதிரடியான, கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
"இனி நோ எண்ட்ரி" - முதல்வர் விஜய்யின் கறார் உத்தரவு!
Image Credit : Asianet News

"இனி நோ எண்ட்ரி" - முதல்வர் விஜய்யின் கறார் உத்தரவு!

ஆட்சியில் இருக்கும் தவெகவில் இணைந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் அரசியல் எதிர்காலத்தை தக்க வைக்கவும் அதிமுக முன்னாள் புள்ளிகள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இதற்கு முதலமைச்சர் விஜய் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "இனி மாற்றுக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களையோ, எம்.எல்.ஏ-க்களையோ தவெகவில் சேர்க்க வேண்டாம்" என்று ஆனந்த் மற்றும் அதவ் அர்ஜுனாவிற்கு விஜய் கறாராக உத்தரவிட்டுள்ளார். ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு இந்த அதிரடி முடிவை விஜய் எடுத்ததற்குக் காரணங்கள் இதுதான்.

  • வழக்குகளின் பின்னணி: தவெகவில் இணையத் துடிக்கும் பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பல்வேறு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • மக்களின் அதிருப்தி: ஊழல் புகார்களுக்கு உள்ளான பழைய முகங்களை ஆளுங்கட்சியில் சேர்த்தால், தவெக அரசுக்கு மக்களிடம் இருக்கும் நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்படும்.
  • தூய்மையான நிர்வாகம்: "மக்களிடம் நல்ல பேர் இல்லாதவர்களை கட்சியில் சேர்த்து, நம்முடைய தூய்மையான ஆட்சி நிர்வாகத்தைக் கெடுத்துக் கொள்ள முடியாது" என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருக்கிறார்.

Related Articles

Related image1
CM Vijay: "அண்ணே... பெட்ரோல் போடவாவது காசு இருக்கா?!" ரூ.2 லட்சம் சம்பளத்தில் ‘பட்ஜெட்’ பத்மநாபனான சிஎம் விஜய்!
Related image2
TVK Vijay: 'ஸ்டாப் டிரக்ஸ்' முழக்கமும்! மறுபக்கம் மதுபான ஆலை அதிபர் என்ட்ரி? யார் இந்த சந்தீப் ஆனந்த்? விஜய் கட்சியில் வெடித்த சர்ச்சை!
35
விஜயபாஸ்கர் விவகாரமும் தவெக நிர்வாகிகளின் எதிர்ப்பும்!
Image Credit : Asianet News

விஜயபாஸ்கர் விவகாரமும் தவெக நிர்வாகிகளின் எதிர்ப்பும்!

ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை தவெகவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்தபோது, தவெகவின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே, சமீபத்தில் அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்துள்ள மற்றொரு முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கரையும் தவெகவில் இணைக்க அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் காய் நகர்த்தினர். ஆனால், இதற்கும் தவெகவின் உயர்மட்ட நிர்வாகிகள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "ஆட்சியைப் பிடித்து நல்ல முறையில் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், இவர்களைச் சேர்ப்பது பின்னடைவைத்தான் தரும்" என அவர்கள் முதலமைச்சரிடம் வாதிட்டுள்ளனர்.

45
செங்கோட்டையன் கொடுத்த க்ளூ?
Image Credit : Asianet News

செங்கோட்டையன் கொடுத்த க்ளூ?

இந்த விவகாரத்தில் மற்றொரு சுவாரஸ்யமான திருப்பமும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிமுகவில் இருந்து வந்த மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையனும், முதலமைச்சர் விஜய்யிடம் ஒரு முக்கியமான ஆலோசனையை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

"ஏற்கனவே மக்கள் உங்களுக்கு நல்ல பெரும்பான்மையைத் தந்துள்ளனர். இந்தச் சூழலில், வழக்குகளில் சிக்கிய பழைய அரசியல்வாதிகளை கட்சியில் சேர்ப்பது அரசுக்குத்தான் கெட்ட பெயரைத் தரும். மக்கள் விரும்பும் புதிய ரத்தத்தை மட்டுமே ஊக்கப்படுத்துங்கள்" என்று செங்கோட்டையன் முதலமைச்சர் விஜயிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.

மூத்த அரசியல்வாதியின் இந்த அனுபவபூர்வமான ஆலோசனையும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் எதிர்ப்பும் முதலமைச்சர் விஜய்யை தீர்க்கமாக யோசிக்க வைத்துள்ளது. இதன் விளைவாகவே, தற்போது மாற்றுக்கட்சி முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவின் கதவுகள் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுள்ளன.

55
விஜய்யின் மாஸ்டர் பிளான்!
Image Credit : AI

விஜய்யின் மாஸ்டர் பிளான்!

அரசியலில் புதிய பாதையை உருவாக்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அரசின் மீதும், கட்சியின் மீதும் எந்தவொரு கறையும் படிந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். மாற்றுக்கட்சியின் பெரிய தலைவர்களை நம்பி தவெகவின் தூய்மையான பிம்பத்தை இழக்க அவர் தயாராக இல்லை.

முதலமைச்சர் விஜய்யின் இந்த "நோ-அல்வா" பாலிசி, தவெகவில் தஞ்சம் புக நினைத்த அதிமுக மூத்த புள்ளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஆளுங்கட்சியின் இந்த நேர்மையான அதிரடி ஆட்டம், தமிழக மக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் முதல்வர் விஜய்யின் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
தமிழ்நாடு அரசு
அரசியல்
ஏசியாநெட் நியூஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Recommended image2
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
Recommended image3
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!
Related Stories
Recommended image1
CM Vijay: "அண்ணே... பெட்ரோல் போடவாவது காசு இருக்கா?!" ரூ.2 லட்சம் சம்பளத்தில் ‘பட்ஜெட்’ பத்மநாபனான சிஎம் விஜய்!
Recommended image2
TVK Vijay: 'ஸ்டாப் டிரக்ஸ்' முழக்கமும்! மறுபக்கம் மதுபான ஆலை அதிபர் என்ட்ரி? யார் இந்த சந்தீப் ஆனந்த்? விஜய் கட்சியில் வெடித்த சர்ச்சை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved