MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • CM Vijay: "அண்ணே... பெட்ரோல் போடவாவது காசு இருக்கா?!" ரூ.2 லட்சம் சம்பளத்தில் ‘பட்ஜெட்’ பத்மநாபனான சிஎம் விஜய்!

CM Vijay: "அண்ணே... பெட்ரோல் போடவாவது காசு இருக்கா?!" ரூ.2 லட்சம் சம்பளத்தில் ‘பட்ஜெட்’ பத்மநாபனான சிஎம் விஜய்!

முதல்வர் விஜய், ஒரு படத்திற்கு 200 கோடி வாங்கியவர் தற்போது ரூ.2 லட்சம் அரசு சம்பளம் வாங்கும் சுவாரஸ்யத்தை இந்த கட்டுரை அலசுகிறது. இது ஜெயலலிதா, கருணாநிதி போன்றோரின் சம்பள வரலாற்றையும், விஜய் தனது சினிமா பாணியில் அரசியலை எதிர்கொள்வதையும் விவரிக்கிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 24 2026, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இது வெறும் ரீல் இல்லப்பா, ரியல்! மாஸ் காட்டும் விஜய்.!
Image Credit : Asianet News

இது வெறும் ரீல் இல்லப்பா, ரியல்! மாஸ் காட்டும் விஜய்.!

"சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..." என்று வெள்ளித்திரை பாட்டுக்கு தகுந்தாற்போல் விஜய், இன்று நிஜமாகவே ஜார்ஜ் கோட்டையின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை அமைத்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆக அவர் அசெம்பிளியில் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இங்கேதான் ஒரு சுவாரஸ்யமான ட்விஸ்ட்! 

நேற்று வரை ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை அசால்ட்டாக ‘கலெக்ஷன்’ அள்ளிய நம்ம தளபதிக்கு, இப்போது அரசு கொடுக்கும் மாதச் சம்பளம் வெறும் 2 லட்சத்து சொச்சம் ரூபாய் தான்! "யோவ்... 200 கோடி எங்கே, 2 லட்சம் எங்கே? நம்ம அண்ணனுக்கு இது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு பெட்ரோல் போடக் கூட பத்தாதே!" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கதறி வருகிறார்கள். ஆனால், சட்டசபையில் எதிர்க்கட்சிகளைப் பார்த்து "இது வெறும் ரீல் இல்லப்பா, ரியல்!" என்று கூலாக ‘கத்தி’ பட ஸ்டைலில் புன்னகையோடு வலம் வருகிறார் முதலமைச்சர் விஜய்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
‘பட்ஜெட்’ பத்மநாபன் ஸ்டைலில் தமிழக அரசியல் வரலாறு
Image Credit : X

‘பட்ஜெட்’ பத்மநாபன் ஸ்டைலில் தமிழக அரசியல் வரலாறு

வருமானம் அதள பாதாளத்திற்குப் போய்விட்டதே என்று விஜய் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால், தமிழக கோட்டையின் சம்பள சரித்திரமே அப்படிப்பட்டதுதான் என்பதை  ஃப்ளாஷ்பேக் பக்கங்களை திருப்பிப் பார்த்தால் புரியும்.

 1991-ல் புரட்சித் தலைவி ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, "மக்களுக்குச் சேவை செய்யவே வந்தேன்" என்று சொல்லி, மாதச் சம்பளமாக வெறும் 1 ரூபாய் மட்டுமே வாங்கினார். கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தாலும், அந்த ஒரு ரூபாய் சம்பளம் அன்றைய தேதியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட மாஸ் சீன்! 

அதேபோல், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தன் வாழ்நாளில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தபோதும், பல நேரங்களில் தன் சம்பளப் பணத்தை அப்படியே முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 'டொனேட்' செய்துவிட்டு, தன் பேனா முனையையே நம்பி வாழ்ந்த ‘பராசக்தி’ நாயகனாகத் திகழ்ந்தார்.

Related Articles

Related image1
Vijay Trisha: நைட்டு 12 மணிக்கு; முதல்வர் விஜய் வீட்டில் த்ரிஷா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க... வைரலாகும் பர்த்டே போஸ்ட்
Related image2
CM Vijay : என்ன உங்க அப்பாவையே காணோம்... கொளத்தூர்ல 5 நிமிஷம் பேசுனதுக்கே ஆட்டம் ஆடுச்சு - சட்டமன்றத்தில் சம்பவம் செய்த முதல்வர் விஜய்..!
35
இன்றைய முதல்வர் சம்பளமும் விஜய்யின் கணக்கும்
Image Credit : X

இன்றைய முதல்வர் சம்பளமும் விஜய்யின் கணக்கும்

காலம் மாற மாற விலைவாசிக்கு ஏற்ப அரசியல்வாதிகளின் சம்பளமும் உயர்ந்தது. கடந்த 2018-ல் கொண்டுவரப்பட்ட சட்டப்படி, தமிழக முதல்வரின் சம்பளம் படிகளுடன் சேர்த்து சுமார் 2.05 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாங்கிய அதே 2 லட்சத்து சொச்சம் ரூபாய் சம்பளத்தைத்தான், இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விஜய்யும் வாங்குகிறார். சினிமா மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த விஜய், இன்று பக்கா அரசியல்வாதியாக மாறி, தற்போதைய அரசு விதிமுறைகளின்படி தன் பட்ஜெட்டை சுருக்கிக் கொண்டுள்ளார்.

45
"வசூல் ராஜா" டூ "சட்டசபை ராஜா".! சினிமா எஃபெக்ட்ஸ்.!
Image Credit : X

"வசூல் ராஜா" டூ "சட்டசபை ராஜா".! சினிமா எஃபெக்ட்ஸ்.!

சினிமாவில் கோடிகளைப் பார்த்த விஜய், இன்று 2 லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் எப்படி வாழ்கிறார் என்றால், அங்கேதான் அவரிடம் இருக்கும் ‘துப்பாக்கி’ போன்ற சீறி பாயும் திட்டங்கள் கைகொடுக்கின்றன. "காசு, பணம், துட்டு, மணி, மணி..." என்று சினிமா தயாரிப்பாளர்களிடம் கறாராக இருந்த விஜய், இன்று அரசு கஜானாவைத் துடைக்க நினைப்பவர்களை நோக்கி, "மக்களோட ஒரு பைசா காசைக்கூட யாரும் தொட முடியாது, தொட்டா விடமாட்டேன்!" என்று அசெம்பிளியில் ‘பிகில்’ பறக்கவிடுகிறார்.

அசெம்பிளியில் எதிர்க்கட்சிகள் "நீங்க சினிமா ஷூட்டிங் செட்ல இருந்து டைரக்டா வந்துட்டீங்க" என்று ஓட்ட, நம்ம சிஎம்-மோ, "நாங்க ரசிகர் மன்றமா இருந்தப்பவே ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டுன்னு மக்கள் கூடத்தான் நின்னோம்" என்று ‘கொடி பறக்குதா’ ஸ்டைலில் பதிலடி கொடுக்கிறார்.

55
தமிழக அரசியலில் 'மாஸ்டர்' கிளாஸ் ரகம்
Image Credit : Asianet News

தமிழக அரசியலில் 'மாஸ்டர்' கிளாஸ் ரகம்

விஜய் அண்ணாவின் சம்பளம் அவரது காரின் பெட்ரோல் செலவுக்குப் பற்றுகிறதோ இல்லையோ, 'சிங்கப்பெண் காவல் படை' என்றும், ஊழல் ஒழிப்பு என்றும் விஜய் போடும் புதுப் புது ஸ்கெட்ச்சுகள், தமிழக அரசியலில் 'மாஸ்டர்' கிளாஸ் ரகம். கோடிகளைக் கொடுத்த சினிமாவுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, இந்த 2 லட்சம் ரூபாய் முதலமைச்சர் சம்பளத்தை ரசித்து வாங்கும் விஜய்யின் தற்போதைய டார்கெட், மக்கள் மனதில் என்றும் 'நண்பன்' ஆக நிலைத்திருப்பதுதான்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு பட்ஜெட்
விஜய் (நடிகர்)
டிவி.கே. விஜய்
அரசியல்
அரசியல் சுவாரஸ்யம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சுக்கிரன் ஆட்டம் ஆரம்பம்.! இனி 3 ராசிகளுக்கு காதல் பொங்கி வழியுமாம்.! 3 ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்குமாம்.!
Recommended image2
Today Rasipalan: அதிர்ஷ்டத்தின் உச்சம் யாருக்கு? ஜூன் 24-ம் தேதிக்கான 12 ராசிகளின் ரகசிய பலன்கள்!
Recommended image3
இந்த 5 ராசிக்காரர்களுக்கு வருங்காலத்தை முன்கூட்டியே அறியும் சக்தி உண்டு
Related Stories
Recommended image1
Vijay Trisha: நைட்டு 12 மணிக்கு; முதல்வர் விஜய் வீட்டில் த்ரிஷா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க... வைரலாகும் பர்த்டே போஸ்ட்
Recommended image2
CM Vijay : என்ன உங்க அப்பாவையே காணோம்... கொளத்தூர்ல 5 நிமிஷம் பேசுனதுக்கே ஆட்டம் ஆடுச்சு - சட்டமன்றத்தில் சம்பவம் செய்த முதல்வர் விஜய்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved