பணம் கொடுத்தால் மு.க.ஸ்டாலின் கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம்..! இபிஎஸ் அணியை கலாய்க்கும் டிடிவி தினகரன்

அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்தால் பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூட பொதுச்செயலாளராக தேர்வாகலாம் என  டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
 

TTV Dhinakaran said that even M K Stalin can be selected as AIADMK General Secretary if money is given

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம்..?

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரண்டு பிரிவாக பிரிந்துள்ளது. இதன் காரணமாக தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே அதிமுகவில் சசிகலா பிரிந்து சென்றது தென் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஓபிஎஸ்ம் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டுவது அவரது சமுதாயத்தை சேர்ந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 69 மாவட்ட செயலாளர்களும், 2400க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் உள்ளனர். ஓபிஎஸ்க்கு ஆதரவாக 6 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே உள்ளனர். இதே போல பொதுக்குழு உறுப்பனிர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. ஓபிஎஸ் தரப்போ மாவட்ட செயலாளர்கள் முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் வரை பல கோடி ரூபாய் கொடுத்து இபிஎஸ் அணி வாங்கி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதே கருத்தை உறுதி செய்யும் வகையில் டிடிவி தினகரனும் கூறியுள்ளார். 

துரோகி எடப்பாடி, பச்சோந்தி ஆர்.வி உதயகுமார்..ஜெயக்குமாரை டாராக கிழித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் !

அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? இபிஎஸ், ஓபிஎஸ் மீது சசிகலா ஆவேசம்

TTV Dhinakaran said that even M K Stalin can be selected as AIADMK General Secretary if money is given

அதிமுக பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின்

சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரன்,  அதிமுகவில் தனி நபர்களை விலைக்கு வாங்கி ஆதரவு என்கிற பெயரில் தலைமை பதவிக்கு வருவதை இபிஎஸ் முயற்சி செய்வதாக கூறினார். ஓபிஎஸ்  அதனை தடுக்க முயற்சி செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.  பொதுச்செயலாளர் என்கிற தலைமை பதவிக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர் எழுதி வைத்து சென்றுள்ளார். ஆனால் அதனை மாற்ற இவர்கள் முயற்சி செய்து கொண்டுள்ளனர்.  திமுக தலைவர் ஸ்டாலினே  பேரூராட்சி செயலாளருக்கு 50 லட்சத்தில் ஆரம்பித்து மேலே உள்ளவர்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவில் பொதுச் செயலாளர் ஆகிவிடலாம் என கூறினார். வானகரத்தில் உள்ள அதே ஶ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழுவை அவர்களே கூட்டி  ஸ்டாலினை பொதுச்செயலாளராக  தேர்வு செய்து விடுவார்கள் என விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் அதிமுகவிலிருந்து நீக்கம்.. போஸ்டர் ஒட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதகளம்!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios