அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? இபிஎஸ், ஓபிஎஸ் மீது சசிகலா ஆவேசம்
உள்ளாட்சி அமைப்புகளில் 34 பதவிகளுக்கு நடக்கும் தேர்தலில் தனிப்பட்ட சிலரின் சுயநலத்தால், நமது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலில் தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது வேதனையை அளிக்கிறது.
அதிமுக விவகாரம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணிகளும், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழு நடத்த தடை ஏற்பட்டால், ஆன்லைன் வாயிலாக பொதுக்குழுவை நடத்தும் திட்டத்தை பிளான் -பி ஆக எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது அதிருப்தியில் இருக்கும் ஆட்களை எப்படியாவது நம் பக்கம் இழுத்திட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?
சசிகலா சுற்றுப்பயணம்
வரும் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்குமா ? என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலா பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தொண்டர்களிடம் பேசினார். அப்போது, ‘50 ஆண்டுக்கால வரலாற்றில் அதிமுக தொடர் தோல்வியை இதுவரை கண்டதில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் 34 பதவிகளுக்கு நடக்கும் தேர்தலில் தனிப்பட்ட சிலரின் சுயநலத்தால், நமது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலில் தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது வேதனையை அளிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !
சசிகலா ஆவேசம்
ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா ? இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது ? என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளை கடைப்பிடிப்பவர்களே உண்மையான அதிமுக தலைவராக இருக்க முடியும். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும்.
அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக அது இருக்க வேண்டும். பண பலமும், படை பலமும் ஒரு தலைமையை தீர்மானிக்க முடியாது. மக்கள் பலமும், தொண்டர் பலமும் தான் ஒரு தலைமையை தீர்மானிக்கும். ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையில் இயக்கம் மீண்டும் வலிமை பெறும்’ என்று பேசினார் சசிகலா.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்