MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • 5 ஆண்டுகால உழைப்பெல்லாம் வீண்..! அப்செட்டில் திமுகவினர்..! புலம்ப வைத்த அதிமுக ஓடுகாலிகள்..!

5 ஆண்டுகால உழைப்பெல்லாம் வீண்..! அப்செட்டில் திமுகவினர்..! புலம்ப வைத்த அதிமுக ஓடுகாலிகள்..!

இத்தனை ஆண்டுகள் பட்ட கஷ்டத்திற்கு பலனில்லாமல் போய்விட்டது என்ற வருத்தம் தான் இருக்கிறதாம். கூடவே தொகுதி நமக்கில்லை என்ற தொய்வில் இருக்கிறார்கள் அவர்கள். ஒரத்த நாட்டில் தான் இந்த நிலை என்றால் தஞ்சையிலும் அதே நிலைதான்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 05 2026, 09:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வருத்தத்தில் திமுக நிர்வாகிகள்
Image Credit : Asianet News

வருத்தத்தில் திமுக நிர்வாகிகள்

திமுகவின் கோட்டையாக உள்ள டெல்டா மாவட்டத்தில் அதிமுகவிற்கு ஆறுதலாக இருந்த வைத்திலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்தது உள்ளூர் திமுக நிர்வாகிகளை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பட்ட கஷ்டத்திற்கு பலன் இல்லாமல் போய்விட்டது என்று வருத்தத்தில் ஒரத்தநாடு திமுக நிர்வாகிகள் இருக்கும் நிலையில் தஞ்சையை கைப்பற்ற பத்து பேர் இருப்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தை திமுக, அதிமுக என எந்த கட்சி ஆண்டாலும் டெல்டா மாவட்டங்களில் வெற்றி முகத்தில் இருப்பது என்னவோ திமுக தான். திமுகவின் கோட்டையான தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஏழு தொகுதிகளை கைப்பற்றியது திமுக. அதிமுகவினர் உருண்டு புரண்டாலும் தஞ்சையை தங்கள் கோட்டையாக மாற்றவே முடியவில்லை. அந்த வரலாற்றை முழுமையாக அழிக்க முடியாவிட்டாலும், சிறு ஆறுதல் படுத்தும் வகையில் வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று அதிமுகவின் மானத்தை காப்பாற்றினார். ஆனால், அந்த ஒரே ஒரு தொகுதியிலும் யார் கண்பட்டதோ தெரியவில்லை. தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்தியலிங்கம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சந்தோஷத்தை கெடுத்த ஒரத்த நாடு
Image Credit : Asianet News

சந்தோஷத்தை கெடுத்த ஒரத்த நாடு

கடந்த முறைதான் ஒரத்தநாடு கைநழுவி சென்றது. இந்த முறையாவது விட்டதை பிடிக்க வேண்டும் என்று உழைப்பில் திமுகவை சேர்ந்த துணைமேயர் அஞ்சுகம் பூபதி, எல்.ஜி.அண்ணா, மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு, பகல் பாராம வேலை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் சுக்கு நூறாக்கும் வகையில் வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்து விட்டார். ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏவான வைத்தியலிங்கம் வந்தது திமுக தலைமைக்கு வேண்டுமானால் கோட்டையை வலுப்படுத்த கூடுதல் பலம் கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தை கொடுக்கலாம். ஆனால் ஒரத்தநாட்டை பிடிக்க 5 ஆண்டுகளாக மக்கள் பணிகளை ஓடோடி செய்துவரும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, எல்.ஜி.அண்ணா, மகேஷ் கிருஷ்ணசாமிக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை.

மாறாக இத்தனை ஆண்டுகள் பட்ட கஷ்டத்திற்கு பலனில்லாமல் போய்விட்டது என்ற வருத்தம் தான் இருக்கிறதாம். கூடவே தொகுதி நமக்கில்லை என்ற தொய்வில் இருக்கிறார்கள் அவர்கள். ஒரத்த நாட்டில் தான் இந்த நிலை என்றால் தஞ்சையிலும் அதே நிலைதான். ஒரு தொகுதிக்கு 10 பேர் போட்டி போடும் சூழல் உள்ளதால் மேயர் சண். ராமநாதன், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை இளைஞரணியை சேர்ந்த உதயநிதி ஆகிய மூன்று பேரும் வரும் தேர்தலில் எப்படியாவது சீட்டை கேட்டு பெற வேண்டும் என்பதற்காக அறிவாலயம் நோக்கி நடையாய் நடக்கிறார்கள்.

Related Articles

Related image1
Now Playing
கை நழுவிப்போன காங்கிரஸ்.. பாஜக கூட்டணியில் விஜய்..? அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்..!
34
விருப்பமனு செய்தவர்கள் நம்பிக்கை
Image Credit : our own

விருப்பமனு செய்தவர்கள் நம்பிக்கை

அதிலும் நகர செயலாளர் பதவி பறிக்கப்பட்டு கட்சித் தலைமையின் கண்டிப்பில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் மறக்காமல் மாதம் ஒருமுறை அறிவாலயம் சென்று அட்டெண்டன்ஸ் போடுகிறார். அதுபோக கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் ஏழு பேர் விருப்பமனு தாக்கல் செய்துவிட்டு அறிவாலயத்தின் பதிலுக்காக அமைதியோடு பொறுமையாய் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே பதவியில் இருந்தவர்கள் தான் மீண்டும் மீண்டும் அமர வேண்டுமா? நாங்களும் தான் கட்சிப்பணி செய்கிறோம். அதற்கான பலனும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்பமனுவை தாக்கல் செய்த ஏழு பேரும் இருக்கிறார்கள்.

44
திமுகவுக்கு திமுகவே போட்டி
Image Credit : Asianet News

திமுகவுக்கு திமுகவே போட்டி

மேயர் சண்.ராமநாதன் மீது சில சர்ச்சைகள் இருந்தாலும், சமீப காலமாக தஞ்சை மக்கள் எளிதில் அணுகக்கூடிய ஒருவராக இருக்கிறார். அதேநேரம் சிறந்த மாநகராட்சி விருதையும் பெற்றார். அதேபோல தஞ்சை இளைஞரணியை சேர்ந்த உதயநிதி துணை முதலமைச்சர் உதயநிதியின் பிறந்தநாள் விழாவை 100 நாட்கள் நடத்தி கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் எடுத்தார். திமுக வேட்பாளராக யார் அறிவிக்கப்படுகிறாரோ அவர் சட்டமன்ற உறுப்பினராவது உறுதி. தேர்தல் நடத்தி வாக்குகளை எண்ண வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அதனால்தான் தஞ்சையை கைப்பற்ற எத்தனை போட்டோ போட்டி.

பொதுவாக திமுகவிற்கு அதிமுக போட்டியாகவும், அதிமுகவுக்கு, திமுக போட்டியாகவும் இருக்கும். இப்போது டெல்டா மாவட்டங்களில் திமுகவிற்கு திமுகவினரே போட்டியாக உள்ளதால் உடன்பிறப்புகள் எல்லாம் புலம்பி வருகிறார்கள்.

About the Author

TR
Thiraviya raj
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
DK Shivakumar: பதவியேற்றதும் முதல் கையெழுத்து: மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!
Recommended image2
CM Vijay: காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை சீட்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..
Recommended image3
Kalaignar Birthday: இங்க் பேனா முதல் மீன் குழம்பு வரை..! கருணாநிதி பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Related Stories
Recommended image1
Now Playing
கை நழுவிப்போன காங்கிரஸ்.. பாஜக கூட்டணியில் விஜய்..? அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved