MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை.! அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி!

ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை.! அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் போது, ஆசிரியர்கள் மற்றும் தேர்வுப் பணியாளர்கள் தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 05 2026, 08:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
Image Credit : School education pro

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்வின்போது ஆசிரியர்களும் செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

25
அரசு தேர்வுகள் இயக்குநர்
Image Credit : Google

அரசு தேர்வுகள் இயக்குநர்

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மார்ச் 2026 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை தவறாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

Related image1
பெட்டி பெட்டியாக தக்காளி, மூட்டை மூட்டையாக வெங்காயம்.! பை பையாக அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு.?
Related image2
குஷியோ குஷி.! மார்ச் 10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! என்ன காரணம்?
35
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை
Image Credit : our own

தேர்வுக் கட்டுப்பாட்டு அறை

* அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், நிலையான பறக்கும் படையினர், அறைக் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து வகை தேர்வு மையப் பணியாளர்களும், ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தனது செல்போன்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்துவிட்டு, இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் உறுதிமொழி சான்றினை பூர்த்தி செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

45
தவறாமல் ஒப்படைக்க வேண்டும்
Image Credit : our own

தவறாமல் ஒப்படைக்க வேண்டும்

* ஒவ்வொரு அறையிலும் அறைக் கண்காணிப்பாளர்கள் வினாத்தாள்களை தேர்வர்களுக்கு வழங்கிய பின் மீதமுள்ள வினாத்தாள்களை அதே உறையினுள்ளிட்டு Cellotape கொண்டு Seal செய்து முதன்மைக் கண்காணிப்பாளர் துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். வினாத்தான் மீதம் எதுமில்லாத உறைகளையும் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இவ்வாறு பெறப்பட்ட அனைத்து உறைகளையும் கட்டாகக் கட்டி மீதமுள்ள வினாத்தாள்களுடன் வழித்தட அலுவலரிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.

55
விடைத்தாள் சேகரிப்பு
Image Credit : our own

விடைத்தாள் சேகரிப்பு

* விடைத்தாள் சேகரிப்பு மையங்களின் தொடர்பு அலுவலர்கள் இவ்வாறு பெறப்படும் வினாத்தாள் உறைகளிலிருந்து வினாத்தாள்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெற்று உறைகளை தனிக் கட்டுகளாகக் கட்டி அனைத்து தேர்வுகள் முடிவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
கொங்கில் டான் செந்தில் பாலாஜியா..? எஸ்.பி.வேலுமணியா..? 30 தொகுதிகளில் முரட்டு மோதல்..!
Recommended image2
Now Playing
ஒ.பி.எஸ் எண்ட்ரியால் ரணகளப்படும் தேனி.. எதிரிக்கு எதிரி நண்பன்...ஓபிஎஸ் கூடாரம் முற்றிலும் காலி
Recommended image3
அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்.. வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Related Stories
Recommended image1
பெட்டி பெட்டியாக தக்காளி, மூட்டை மூட்டையாக வெங்காயம்.! பை பையாக அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு.?
Recommended image2
குஷியோ குஷி.! மார்ச் 10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved