தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவத்தில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News live : கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை !
Tamil News live : கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை !
தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம்.. வசமாக சிக்கிய பாஜக மாவட்ட தலைவர்
பாஜக பற்ற வைத்த தீ.. கொதிக்கும் காங்கிரஸ் !
முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம் மருத்துவமனையில் அனுமதி
தனக்கு ப்ளட் பிரசர், நெஞ்சுவலி உள்ளிட்ட உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பதாக கேபி, ராமலிங்கம் தெரிவித்தையடுத்து, பாஜக முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
மெரினா அலையில் சிக்கிய சிறுவன்.. காப்பற்றிய டிஜிபி சைலேந்திர பாபு
கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
கார்த்தியின் விருமனுக்கு ப்ரோமோஷன் செய்யும் ஜெயக்குமார்
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள திரைப்படம் 'விருமன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், ராஜ்கிரண், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சென்னை ஐஐடி - மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு
10ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தாட்கோவில் பதிவு செய்த மாணவர்கள் சென்னை ஐஐடி, நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
முதல்வரை டம்மியாக்கிய துணை முதல்வர் - மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமே அனைத்து துறைகளையும் கவனித்து வந்தனர். மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர்.
தமிழ்நாட்டில் உங்க விளையாட்டு எடுபடாது.. முதல்வர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், விடுதலையின் 75-ஆம் ஆண்டு பவளவிழாவில் தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும்.
இந்தியாவின் வாரன் பஃபெட்.. யார் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ?
இந்தியாவின் வாரன் பஃபெட்’ என அழைக்கப்படுகிறார். தனது கல்லூரி காலத்திலேயே பங்குச்சந்தையில் நாட்டம் கொண்ட ராகேஷ், 1985ஆம் ஆண்டில் ரூ.5,000 பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்.
B.sc நர்சிங் முடித்தவர்களுக்கு அருமையான வேலை.. எய்ம்ஸ் மருத்துவமனையில் காலி பணியிடம்.. எழுத்து தேர்வு எப்போது?
எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் தேசிய காசநோய் நிறுவனத்திலும் காலியாக உள்ள செவிலியர் அதிகாரிகள் பதவிகளுக்கான NORCET எழுத்துத் தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க
திமுக உட்கட்சி தேர்தலில் மா.செ உள்ளடி வேலை...? கட்சி மாற தயாராகும் மூத்த நிர்வாகிகள்..! காத்திருக்கும் பாஜக..
திமுகவின் உட்கட்சி தேர்தல் பல மாவட்டங்களில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தங்களது ஆதரவாளர்களுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் செயல்படுவதால் அதிருப்தி அடைந்துள்ள மூத்த நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக வடமாநிலத்தில் கடைபிடிக்கும் அரசியல் வெறியாட்டத்தை தமிழகத்திலும் நுழைக்க முயற்சியா..! சீமான் ஆவேசம்
தமிழ்நாடு நிதியமைச்சரை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் துணைத் தலைவர் கைது..! அத்துமீறி பூட்டை உடைத்தவர்களை தட்டி தூக்கிய போலீஸ்
தமிழ்நாடு மாநில பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா கோயிலுக்குள் முறைகேடாக நுழைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை .. முழு விவரம்
இந்தியாவின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பினை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
பானையில் இருந்து தண்ணீர் குடித்ததால் ஆத்திரம்.. பட்டியலின சிறுவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்..
பானையில் இருந்து தண்ணீர் குடித்த 9 வயது பட்டியலின சிறுவனை ஆசிரியர் ஷாயில் சிங் சரமாரியாக தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2-வது வாரத்திலும் கல்லாகட்டும் துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’... அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்ட படக்குழு
கார்த்தி நடித்துள்ள விருமன் படம் ரிலீசாகி உள்ள போதும், சீதா ராமம் படமும் பாக்ஸ் ஆபிஸில் மவுசு குறையாமல் வசூலித்து வருகிறது. இந்நிலையில், சீதா ராமம் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை படக்குழுவே வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்! ராமதாஸ் கண்டனம்!
இந்தியாவின் அழுத்தத்தை தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரை அனுமதித்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
பட்ட பகலில் வங்கியில் நகை கொள்ளை.. திட்டம் போட்டு காய் நகர்த்திய கும்பல்..? காவல்துறை சொன்ன முக்கிய தகவல்
கிளை மேலாளர், ஊழியர் ஆகிய இருவரையும் கத்தி காட்டி மிரட்டி, தாக்கியுள்ளது அந்த கும்பல் . மேலும் பாதுகாப்பு பெட்டக அறையின் சாவியை பெற்று, இருவர்களது கை, கால்களை கட்டி வாயில் துணியை வைத்து, கழிப்பறையில் அடைத்துள்ளனர். பின்னர், பாதுகாப்பு அறையை திறந்து அங்கிருந்த 16 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.மேலும் படிக்க
நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டது விரும்பத்தகாத சம்பவம்.. அண்ணாமலை
நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டது விரும்பத்தகாத சம்பவம். அது தவறு. அமைதியை விரும்பும் கட்சியான பாஜகவில் இதபோல நடந்தது வருத்தமளிக்கிறது. நான் முன்பே விமான நிலையம் வந்திருந்தால் சம்பவத்தை நடக்கவிடாமல் தடுத்திருப்பேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
டெல்லியில் வரும் 17ம் தேதி பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரையும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்மேலும் படிக்க