ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 01 May 2025: ராஜஸ்தானை சுருட்டி டேபிள் டாப்க்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்!
Tamil News Live today 01 May 2025: ராஜஸ்தானை சுருட்டி டேபிள் டாப்க்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
ராஜஸ்தானை சுருட்டி டேபிள் டாப்க்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் பிங்க் ஜெர்ஸியில் விளையாடுவது ஏன்?
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முழுவதும் பிங்க் நிற ஜெர்ஸிகளை அணிந்து விளையாடுகின்றனர். இது ‘பிங்க் பிராமிஸ்’ முயற்சியின் பகுதியாகும். இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிராமப்புற பெண்களின் மேம்பாட்டுக்காகத் தொடங்கியது.
மேலும் படிக்கமிரட்டல் அடி கொடுத்த மும்பை! ராஜஸ்தானுக்கு 218 ரன் இலக்கு!
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி 217/2 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் சதம் அடித்தனர், ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் படிக்கஏமன் தாக்குதல் தகவல் கசிவு: டிரம்ப்பின் பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா?
ஏமன் மீதான வான்வழித் தாக்குதல் தகவல் கசிவு தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வால்ட்ஸ் மட்டுமின்றி அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அலெக்ஸ் வோங்கும் பதவிவிலகத் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்கதமிழகத்தில் இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்கவாகனங்கள் விற்பனையில் மாஸ் காட்டிய டிவிஎஸ் மோட்டார்! எவ்வளவு தெரியுமா?
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை ஏப்ரலில் 16% அதிகரித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மேலும் படிக்ககிரெடிட் கார்டு பயனர் இறந்தால் என்ன நடக்கும்?
கிரெடிட் கார்டு பயனர் இறந்தால், பாதுகாப்பற்ற கிரெடிட் கார்டுகளுக்கு, வங்கி இறந்தவரின் சொத்திலிருந்து தொகையை மீட்டெடுக்க முயற்சிக்கும். பாதுகாக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு, வங்கி பிணையத்தை பணமாக்கி கடனை மீட்டெடுக்கும். தனிநபர் கடன்களிலும் இதே நடைமுறைதான்.
மேலும் படிக்கசீனாவில் வரிசையாக மூடப்படும் தொழிற்சாலைகள்! ஊழியர்கள் போராட்டம்! என்ன காரணம்?
அமெரிக்காவின் வரி விதிப்பால் சீனாவில் பல்வேறு தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மேலும் படிக்கஅஸ்வினை ஓரங்கட்டியதால் சிஎஸ்கே தோல்வியா? ஹர்பஜன் சரமாரி விமர்சனம்
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே அணியில் அஸ்வினை ஓரங்கட்டியதற்கு ஹர்பஜன் சிங் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அஸ்வினின் அனுபவத்தைப் பயன்படுத்தாமல், அவரை நீக்கியதால் சிஎஸ்கே தோல்வியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்கவெயிட்டிங் லிஸ்ட் இருந்தாலும் ஈஸியா டிக்கெட் கன்பார்ம் பண்ணலாம்! இதோ டிரிக்ஸ்!
ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் பட்டியல் அதிகமாக இருக்கிறதா? ஆனால் நீங்கள் சில டிரிக்ஸ்களை பயன்படுத்தி கன்பார்ம் டிக்கெட் பெறலாம். அது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.
மேலும் படிக்கசாதி வாரி கணக்கெடுப்பிற்கு திமுக சொந்தம் கொண்டாடுவதா.? இறங்கி அடிக்கும் அன்புமணி
மத்திய அரசின் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிவிப்பை பாமக வரவேற்றுள்ளது. ஆனால், திமுக, காங்கிரஸ் கட்சிகள் இதற்கு சொந்தம் கொண்டாடுவதை பாமக தலைவர் அன்புமணி ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்ககுடிப்பழக்கத்திற்கு அடிமையான டிஸ்கோ சாந்தியின் சோகக் கதை
ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்த டிஸ்கோ சாந்தி, தனது கணவர் ஸ்ரீஹரியின் மரணத்திற்குப் பிறகு மதுவுக்கு அடிமையானார். 23 வருட மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஏற்பட்ட இந்த இழப்பு, அவரை மதுவுக்கு அடிமையாக்கியது. தற்போது மதுப்பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ள அவர், தனது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.
மேலும் படிக்ககிலோ கணக்கில் நகை அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல ரவுடி!
கூட்டாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கிலோ கணக்கில் நகை அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மேலும் படிக்கபுருனே சுல்தானின் ஆடம்பர வாழ்க்கை ரகசியங்கள்!
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான புருனே சுல்தான் ஹசனல் போல்கியாவின் ஆடம்பர வாழ்க்கை முறை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள். $5 பில்லியன் மதிப்புள்ள கார் சேகரிப்பு, தங்க முலாம் பூசப்பட்ட விமானம் மற்றும் பிரம்மாண்டமான அரண்மனை என அவரது சொத்துக்கள் பிரமிக்க வைக்கின்றன.
மேலும் படிக்கவிராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை இத்தனை ஆயிரமா? அப்படி என்ன ஸ்பெஷல்?
விராட் கோலி 'பிளாக் வாட்டர்' எனப்படும் அதிக தாதுக்கள் நிறைந்த தண்ணீரை குடிக்கிறார். இந்த நீரின் விலை, சிறப்புகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்கவிஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள்.! மதுரை விமான நிலையம் ஸ்தம்பிப்பு
கோவை கருத்தரங்கைத் தொடர்ந்து, மதுரை பயணத்தின்போது விஜய் ரசிகர்கள் மீண்டும் அத்துமீறல்களில் ஈடுபட்டனர். விஜய்யின் வாகனத்தில் ஏறுவது, பைக்கில் பின் தொடர்வது, பொதுமக்கள் மீது பால் பாக்கெட் வீசுவது என விமான நிலையமே ஸ்தம்பித்தது.
மேலும் படிக்கசதம் அடித்தும் பிரயோஜனம் இல்லை: வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம் பெறுவதில் சிக்கல்
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி குறைந்த பந்துகளில் சதம் அடித்தாலும் அவர் டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கமதுரையில் கால் வைத்த விஜய்.! 2 கி.மீட்டர் தூரத்திற்கு கூடிய தொண்டர்கள்- உற்சாக வரவேற்பு
அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் மதுரை வந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 2 கி மீட்டர் தூரத்திற்கு திரண்டு நின்று தொண்டர்கள் வரவேற்றனர்.
மேலும் படிக்கஆரஞ்சுப் பொருளாதாரம்: இந்தியாவின் படைப்புப் புரட்சி
பிரதமர் மோடி, மும்பையில் நடந்த வேவ்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவின் "ஆரஞ்சு பொருளாதாரத்தின்" வளர்ச்சி குறித்துப் பேசினார். இசை, திரைப்படங்கள், உணவு, விளையாட்டு மற்றும் அனிமேஷன் உள்ளிட்ட படைப்புத் துறைகளின் வளர்ச்சியை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியப் படைப்பாளிகளுக்கு உலகளாவிய தளத்தை வழங்கும் WAVES முயற்சியையும் அவர் பாராட்டினார்.
மேலும் படிக்க“அவருக்கு பயம் இல்லைங்க“ 14 வயது இளம் புயல் குறித்து புகழ்ந்து தள்ளிய டிராவிட்
இளம் பேட்டிங் நட்சத்திரம் வைபவ்வின் திறமை குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விவாதித்தார். தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க