- Home
- Tamil Nadu News
- மதுரையில் கால் வைத்த விஜய்.! 2 கி.மீட்டர் தூரத்திற்கு கூடிய தொண்டர்கள்- உற்சாக வரவேற்பு
மதுரையில் கால் வைத்த விஜய்.! 2 கி.மீட்டர் தூரத்திற்கு கூடிய தொண்டர்கள்- உற்சாக வரவேற்பு
அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் மதுரை வந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 2 கி மீட்டர் தூரத்திற்கு திரண்டு நின்று தொண்டர்கள் வரவேற்றனர்.

தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், அதனை அகற்ற திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் வைத்துள்ளார் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரை கட்சிக்கு சூட்டிய விஜய், மாநாட்டையும் பிரம்மாண்ட அளவில் நடத்தி முடித்தார்.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்த அவர், களப்பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமித்தும், வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை கூட்டமும் நடத்தினார்.
TVK Vijay
அந்த வகையில் தவெகவை தொடங்கிய விஜய் ஒரு வருடத்தை எட்டிய நிலையில் ஒரு சில முறை மட்டுமே சென்னையில் கூட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட விஜய் கட்சி வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இரண்டு நாட்கள் கோவையில் தங்கியிருந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரண்டு நாட்களும் தங்கியிருந்த விடுதியில் இருந்து கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு ரோட் ஷோ மேற்கொண்டார்.
அப்போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் விஜய்யின் காரின் மீது ஏறியும், பைக்கில் பின் தொடரந்தும் சென்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று கொடைக்கானலில் நடைபெறும் ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமானம் மூலம் மதுரை செல்ல விஜய் திட்டமிட்டார். இதனை அறிந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் காலை முதல் மதுரை விமான நிலையத்திற்கு முன்பாக குவிந்தனர். இதனையடுத்து 200க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மதுரைக்கு வந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையம் முதல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் குவிந்திருந்தனர். இதனையடுத்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தனது பிரச்சார வாகனத்தில் ஏறி அனைவருக்கும வணக்கம் செலுத்தினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனத்திற்கு உள்ளே செல்வதும் வெளியே சென்று வணக்கம் வைப்பதுமாக விஜய் சென்றார்.