சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில், சுந்தர் காலனியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தவர் பிரசன்னா. இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று நள்ளிரவில் இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பிரசன்னா, பிரசன்னாவின் மனைவி மற்றும் மாமியார் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நல்ல உறக்கத்தில் இருந்த போது, தீ ஒருபக்கம் ஏற்பட... பிரிட்ஜில் உள்ள கேஸ் கசிந்து மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து உள்ளனர். அதற்குள், பின்னர் தீ மளமளவென பரவி வீடு முழுக்க எரிந்து உள்ளது. வீட்டில் இருந்து தொடர்ந்து வெளியேறி வந்த புகையால் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக தீயை அணைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டு உள்ளது? வீட்டில் ஏதாவது விளக்கு ஏற்றி வைத்தனாரா..? அல்லது  வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்ததா என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.