Asianet News TamilAsianet News Tamil

வாக்காளர்கள் பெயர் நீக்கமா.? பாஜகவிற்கு பூத் ஏஜென்ட் இருந்தா முன்கூட்டியே தெரிந்திருக்கும்- ஆர்.பி.உதயகுமார்

கடந்த 15 ஆண்டுகளாக  தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள், இந்த தேர்தல் உடன் காணாமல் போய்விடுவார் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

RB Udayakumar has said that TTV Dhinakaran will disappear with the parliamentary elections KAK
Author
First Published Apr 25, 2024, 12:55 PM IST

நீர் மோர் பந்தல் திறந்த அதிமுக

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நீர், மோர் பந்தல் அமைக்க அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியத்தின் சார்பில் குமாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார்,  24 நேரத்தில் சோழவந்தான் தொகுதியில் உள்ள குமாரம், அலங்காநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மக்களை தாகம் தணிக்க வகையில் நீர் மோர் இளநீர் சர்பத் உள்ளிட்ட நீர் மோர் பந்தலை திறக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

RB Udayakumar has said that TTV Dhinakaran will disappear with the parliamentary elections KAK

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு

தற்போது தமிழகம் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது அதற்கு பல உதாரணம் சொல்லலாம், புரட்சித்தலைவி அம்மா மக்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி திட்டத்தை தொடங்கி வைத்தார், தற்போது இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருகிறது. கோவில்பட்டியில் திமுகவை சேர்ந்தவர் 3.50 லட்சம்டன் அரிசியை கடத்தி உள்ளார் இதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அதேபோல் சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் 7000 போலீசார் காவல் பணியில் இருந்தனர்  ராமராயர் மண்டபத்தின் அருகே பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் மோதி ஒரு இளைஞரை கொலை கொலை செய்தனர் இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் . எங்கு பார்த்தாலும் பெட்ரோல் குண்டு சம்பவம் நடைபெற்று ஆயுதக்கிடங்காக தமிழகம் மாறியது மட்டுமல்ல, தற்போது போதை பொருள் கிடங்காக மாறிவருவதால்  மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

RB Udayakumar has said that TTV Dhinakaran will disappear with the parliamentary elections KAK

 வாக்குச்சாவடி முகவர்கள் இருந்தார்களா.?

பிரதமர் பரப்புரையில் மதரீதியாக பிரித்துப் பார்த்து பேசகூடாது, சட்டம் அனைவருக்கும் சமம் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சட்டத்தைப் பிரித்து அழகல்ல, இது போன்று நாடு சந்தித்தது இல்லை.  தற்போது மரபை மீறி உள்ளார்களா? என்று அச்சம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது இதுகுறித்து எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார் என தெரிவித்தார்.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.  தமிழகம் முழுதும் 68,300 வாக்குச்சாவடிக்கு உள்ளது இதில் அதிமுகவிற்கு அனைத்து இடங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். பாஜகவிற்கு வாக்குச்சாவடி முகவர்கள் இருந்தால் முன்கூட்டியே தெரிவித்து இருப்பார்கள். இதன் மூலம் கட்டமைப்பு இல்லை என்று தெரிகிறது. தற்போது தேர்தல் தோல்வி காரணமாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என விமர்சித்தார். 

என்னை டார்கெட் செய்கிறாங்க.. 4 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- அலறும் நயினார் நாகேந்திரன்
 

Follow Us:
Download App:
  • android
  • ios