கொளுத்தும் வெயிலுக்கு கூலாக டாஸ்மாக்கில் புதிய வகை வீட் பீர்.!மதுப்பிரியர்கள் உற்சாகம்-விலை எவ்வளவு தெரியுமா.?
கோடை வெயிலால் மதுபிரியர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கூடுதல் உற்சாகத்தை தரக்கூடிய வகையில், முழுக்க,முழுக்க கோதுமையால் உற்பத்தி செய்யப்பட்ட பீர் டாஸ்மாக்கில் அறிமுதம் செய்யயப்பட்டுள்ளது
வெயிலுக்கு ஈடு கொடுக்க புதிய பீர்
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர் அதே நேரத்தில் மதுபரியர்களும் தாங்கள் எப்போதும் விருப்பமாக சாப்பிட்டு வரும் பிராந்தி விஸ்கிக்கு மாற்றாக குழுமையான பீரை நோக்கி செல்லதொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டாஸ்மாக்கில் பீர் தட்டுப்பாடு பல இடங்களில் காணப்படுகிறது. தமிழக டாஸ்மாக் நிறுனவம் 7 கம்பெனிகளில் இருந்து, பீர் வகைகள் வாங்கப்படுகின்றன.
அதில் இரண்டு நிறுவனங்கள் பீர் உற்பத்தியை நிறுத்தி விட்டன. ஒரு நிறுவனம் கடந்த ஆண்டில், குறைந்த அளவே பீர்களை உற்பத்தி செய்து வழங்கியுள்ளது. இதனால் அதிக அளவில் பீரை தொழிற்சாலைகளில் இருந்து வாங்க டாஸ்மாக் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. புதிதாக, 'டிராபிக்கல்' நிறுவனத்திடம் இருந்து பீர் வாங்கப்படுகிறது. தற்போது வரை 10 லட்சம் பீர் பெட்டிகள் ஸ்டாக்கில் உள்ளது. இந்தநிலையில், தமிழக டாஸ்மார்க்கில் ஸ்ட்ராங் பீர், சூப்பர் ஸ்ட்ராங் பீர், லெஹர் பீர் என பல வகையான பீர்களானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கூலிங்கான கோதுமை பீர் அறிமுகம்
ஒரு பாட்டில் பீர் விலையானது 160 ரூபாய் முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலத்தில் மது பிரியர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கக்கூடிய வகையில் புதிய வகை பீர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முழுக்க முழுக்க கோதுமையால் தயாரிக்கப்பட்ட வீட் பீரானது அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் விலையானது 190 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல பிரபல பிராண்ட் ஆன 'காப்டர்' தயாரிப்பில், 'செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத் லெஹர் பீர் வகைகளை விற்பதற்கு, டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த பீர் வகைகள், விரைவில் மது கடைகளில் கிடைக்க உள்ளது