Heat Waves : அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கும்..! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெயிலின் தாக்கல் அதிகரித்து வரும் நிலையில், அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் இயல்பை விட 2" -4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38-41° செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Temperature
கொளுத்தும் வெயில்
தமிழகத்தில் வெயிலின் தாக்கல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு உள்ளிட்ட இடங்களில் 110 டிகிரி வரை வெப்பமானது வாட்டி வதைக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரவே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. மதியம் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளது. மேலும் வரும் நாட்களில் வெப்ப அலை வீசும் எனவும் அலர்ட் செய்துள்ளது.
Heat wave
வானிலை முன்னெச்சரிக்கை
இந்தநிலையில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக
25.04.2024 முதல் 28.04.2024 வரை: தென் தமிழக கன்னியாகுமாரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
25.04.2024 முதல் 29.04.2024 :
அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் இயல்பை விட 2" -4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38-41° செல்சியஸ்.
ஈரப்பதம்:
25.04.2024 (5ល់ 29.04.2024 ល காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.