கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை ராகுலுடன் யாத்திரை நடந்த காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்!
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரை முழுவதுமாக நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது
பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முழுவதுமாக நடைபயணம் மேற்கொண்ட, கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சுஷ்ருதா கவுடா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
மொத்தம் 28 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், சுஷ்ருதா கவுடா பாஜகவில் இணைந்துள்ளார். பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ், முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். மைசூரைச் சேர்ந்த சுஷ்ருதா வொக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர். அவரது வருகை பாஜகவுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக கூறுகிறார்கள்.
கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுஷ்ருதா கவுடா, திடீரென அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணிகளால் தான் ஈர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Lok sabha Election 2024 ரேபரேலி தொகுதியில் போட்டியிட ராகுல், பிரியங்கா விருப்பம்
காங்கிரஸ் சமூகத்தை சாதி அடிப்படையில் பிளவுபடுத்துவதாக குற்றம் சாட்டிய அவர், மக்களுக்கு சேவை செய்வதே எனது குறிக்கோள், எனது கனவை நனவாக்க பாஜக சிறந்த கட்சி என்று உணர்ந்தேன். மக்களுக்கு சேவை செய்வதே எனது குறிக்கோள், எனது கனவை நனவாக்க பாஜக சிறந்த கட்சி என்று உணர்ந்தேன். பாஜகவிற்கு சரியான நபர்கள், சரியான தளம் உள்ளது, மேலும் சமூகத்திற்கான உண்மையான அர்ப்பணிப்பு உள்ள மக்களுக்கு பாஜக வாய்ப்புகளை வழங்குகிறது.” என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வெங்கடேஷ், “கட்சி அமைப்பில் சுஷ்ருதா கவுடா தீவிரமாக இல்லை. எனவே, அவரது வெளியேற்றம் மைசூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸின் வெற்றியை பாதிக்காது.” என்றார்.