MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Billa Re Release: விஜய்யின் கில்லி படத்துக்கு போட்டியாக... வெளியாகும் தல அஜித்தின் 'பில்லா'! ரிலீஸ் தேதி இதோ!

Billa Re Release: விஜய்யின் கில்லி படத்துக்கு போட்டியாக... வெளியாகும் தல அஜித்தின் 'பில்லா'! ரிலீஸ் தேதி இதோ!

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ திரைப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகும் நிலையில், இப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 25 2024, 01:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான, கில்லி திரைப்படம்... 20 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆன நிலையில், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை சுமார் 15 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ள நிலையில், இந்த படத்திற்கு போட்டியாக அஜித்தின் 'பில்லா' வெளியாக உள்ள தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அஜித் ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அதிர விடும், ஸ்கிரீன் பிரசன்ஸோடு தலைசிறந்த படைப்பான 'பில்லா' படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம்  செய்திருந்தார். 'பில்லா' படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பி பார்க்கும் படமாக இது உள்ளது. இப்போது, 'பில்லா' ரீ-ரிலீஸ் என்ற செய்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ​​​​

 

35

ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
 

45

ஜிபி என்டர்டெயின்மென்ட் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி 'பில்லா' படத்தை மீண்டும் வெளியிடுவதில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். "இந்தத் திரைப்படம் வெற்றிகரமான ரீமேக்குகளில் ஒன்றாக சினிமாத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. 'பில்லா' திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு அஜித் ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்த ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமாக அமைந்தது. மே 1, 2024 அஜித்குமார் சாரின் பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படத்தை மீண்டும் வெளியிட ஏடிஎம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றனர். 

55

விஷ்ணுவர்தனின் ஸ்டைலான மேக்கிங்கில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'பில்லா' பாக்ஸ் ஆஃபிஸில் அற்புதமான சாதனையைப் படைத்தது. அஜித்குமாரின் இரட்டை வேடத்தில் நடித்திருக்க, நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். நீரவ் ஷாவின் கண்கவர் காட்சியமைப்பு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் பவர் பேக் இசை ஆகியவை பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கின. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை இப்படம் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved