Asianet News TamilAsianet News Tamil

பத்தாம் வகுப்பு, + 1 மற்றும் + 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு…. செங்கோட்டையன் அதிரடி !!

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

plus two examination time table
Author
Chennai, First Published Jul 20, 2019, 7:14 AM IST

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி எதிர்கொள்வதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாகவும் பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் கால அட்டவணைகள் கடந்த சில ஆண்டுகளாக முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2019-2020-ம் கல்வி ஆண்டில்  பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவை குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.

plus two examination time table
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள ட செய்திக்குறிப்பில் ,  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு (பிளஸ்-2) வருகிற மார்ச் 2-ந்தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவு ஏப்ரல் 24-ந்தேதி வெளியாகும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு (பிளஸ்-1) மார்ச் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி நிறைவடைகிறது. இந்த தேர்வு முடிவு மே மாதம் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) மார்ச் 17-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி முடிவு பெறுகிறது. தேர்வு முடிவு மே 4-ந்தேதி வெளியாகிறது.

பிளஸ்-2 தேர்வு


2.3.20 (திங்கள்) - தமிழ்.

5.3.20(வியாழன்) - ஆங்கிலம்.

9.3.20(திங்கள்) - கணிதம்/ விலங்கியல்/ வணிகவியல்/ நுண் உயிரியியல்/ ஊட்டச்சத்து- உணவு கட்டுப்பாடு / ஜவுளி மற்றும் ஆடை அலங்காரம்/ உணவு மேலாண்மை/ விவசாய அறிவியல்/ நர்சிங்(பொது)/ நர்சிங்(தொழில் முறை).

12.3.20 (வியாழன்) - தொடர்பு ஆங்கிலம்(கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்)/ இந்திய பண்பாடு மற்றும் கலாசாரம்/ கணினி அறிவியல்/ கணினி அப்ளிகேஷன்/ உயிரி வேதியியல்/ மேம்படுத்தப்பட்ட மொழி பாடம்(தமிழ்)/ மனை அறிவியல்/ அரசியல் அறிவியல்/ புள்ளியியல்.

16.3.20-(திங்கள்)- இயற்பியல்/ பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்.

20.3.20-(வெள்ளி)- உயிரியியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்/ தொடக்கநிலை எலட்ரிக்கல் என்ஜினீயரிங்/ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்/ சிவில் என்ஜினீயரிங்/ ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்/ மெக்கானிக்கல் என்ஜினீயரிங்/ ஜவுளி தொழில்நுட்பம்/ அலுவலக மேலாண்மை மற்றும் செக்ரட்டரிஷிப்.

24.3.20 (செவ்வாய்)- வேதியியல்/ கணக்கு பதிவியல்/ புவியியல்.

பிளஸ்-1 தேர்வு

4.3.20(புதன்)- தமிழ்.

6.3.20(வெள்ளி)- ஆங்கிலம்.

11.3.20(புதன்)- கணிதம்/ விலங்கியல்/ வணிகவியல்/ நுண் உயிரியியல்/ ஊட்டச்சத்து- உணவு கட்டுப்பாடு / ஜவுளி மற்றும் ஆடை அலங்காரம்/ உணவு மேலாண்மை / விவசாய அறிவியல்/ நர்சிங்(பொது)/ நர்சிங்(தொழில் முறை).

13.3.20(வெள்ளி)- தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்)/ இந்திய பண்பாடு மற்றும் கலாசாரம்/ கணினி அறிவியல்/ கணினி அப்ளிகேஷன்/ உயிரி வேதியியல்/ மேம்படுத்தப்பட்ட மொழி பாடம்(தமிழ்)/ மனை அறிவியல்/ அரசியல் அறிவியல்/ புள்ளியியல்.

18.3.20(புதன்)- இயற்பியல்/ பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்.

23.3.20(திங்கள்)- உயிரியியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்/ தொடக்கநிலை எலட்ரிக்கல் என்ஜினீயரிங்/ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்/ சிவில் என்ஜினீயரிங்/ ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்/ மெக்கானிக்கல் என்ஜினீயரிங்/ ஜவுளி தொழில்நுட்பம்/ அலுவலக மேலாண்மை மற்றும் செக்ரட்டரிஷிப்.

26.3.20 (வியாழன்)- வேதியியல்/ கணக்கு பதிவியல்/ புவியியல்.

plus two examination time table

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

17.3.20(செவ்வாய்)- தமிழ் முதல் தாள்.

19.3.20(வியாழன்)- தமிழ் இரண்டாம் தாள்.

21.3.20(சனி)- விருப்ப பாடம்.

27.3.20(வெள்ளி)- ஆங்கிலம் முதல் தாள்

30.3.20(திங்கள்)- ஆங்கிலம் இரண்டாம் தாள்

2.4.20(வியாழன்)- கணிதம்.

7.4.20(செவ்வாய்)- அறிவியல்.

9.4.20(வியாழன்)- சமூக அறிவியல்.

இந்த தேர்வுகள் அனைத்தும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் காலை வேளையில் நடைபெறும். தேர்வு எழுதுவதற்கு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios