MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இப்ப அடிக்குற வெயில் சும்மா டிரெயிலர் தான்.. நாளைக்கு தான் ஆரம்பிக்குது கத்திரி வெயில்- வானிலை மையம் அலர்ட்

இப்ப அடிக்குற வெயில் சும்மா டிரெயிலர் தான்.. நாளைக்கு தான் ஆரம்பிக்குது கத்திரி வெயில்- வானிலை மையம் அலர்ட்

வெயிலின் தாக்கம் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு கொளுத்தி வரும் நிலையில், வெயில் காலத்தின் உச்சகட்டமான கத்திரி வெயில் நாளைக்கு தான் தொடங்க இருப்பது பொதுமக்கள் அதிர்ச்சை அடைய வைத்துள்ளது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Ajmal Khan
Published : May 03 2024, 08:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
heat wave

heat wave

மொட்டை மாடியில் சூரியன்

தமிழகத்தில் கோடைகாலமான மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வெயிலின் தாக்கம் உச்சத்தை அடையும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கத்திலையே வெயில் அனல் கக்கி வருகிறது. வீட்டின் மொட்டை மாடியில் சூரியன் வந்து இறங்கிவிட்டதோ.? சூரியன் பூமிக்கு இன்னும் நெருக்கமாக வந்து விட்டதோ என்று நினைக்கும் வகையில் வெயில் வாட்டி வதைக்கிறது. காலை 7 மணிக்கே சூரியன் சுட்டெரிக்க தொடங்கிவிடுகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Heat wave

Heat wave

வீட்டிற்குள் முடங்கும் மக்கள்

நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் கொளுத்துகிறது. இதனால் வெயிலின் மக்களால் நடமாட முடியாத நிலை நீடிக்கிறது. வீட்டிற்குள் முடங்கி இருக்கவும் முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து குழுமையான இடங்களை தேடி குடும்பம் குடும்பமாக செல்ல தொடங்கியுள்ளனர். வட தமிழகமான கரூர், தரும்புரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, வேலூர் பகுதியை புரட்டி போட்ட வெயில் தற்போது சென்னையில் தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டது. நேற்று சென்னையில் 42 டிகிரி வெப்பநிலை பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
 

34

கத்திரி வெயில் நாளை தொடக்கம்

இந்த நிலையில் வெயில் காலத்தில் உச்சகட்டமான அக்னி வெயில் என கூறப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. இந்த வெயிலானது சுமார் 25 நாட்களுக்கு அனலாக தகிக்க போகிறது. கத்திரி வெயில் மே மாதம் 28ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இந்தநிலையில்  வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக 04.05.2024 முதல் 06.05.2024 வரை:  வட  தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 

44

வெப்பநிலை உச்சத்தை அடையும்

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–44° செல்சியஸ் பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கூல் ஈவினிங்... 7 மணிவரை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கோடைக்காலம்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Heavy Rain Warning: போட்டு தாக்கும் வெயிலுக்கு இடையே குட் நியூஸ்.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Recommended image2
Now Playing
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை ..! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அதிரடி போராட்டம் !
Recommended image3
Now Playing
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் ! செங்கோட்டையன் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved