கூல் ஈவினிங்... 7 மணிவரை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அப்டேட்டில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது 7 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Chance of rain in 6 districts of Tamil Nadu in next 3 hours sgb

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மாலை 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் கோடை வெயில் அதிகரித்து வருகிறது. பகலில் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. ஆனால், ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை பெய்து ஓரளவுக்கு சூட்டைத் தணித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அப்டேட்டில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது 7 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த 5 மாவட்டங்களில் அனல் தகிக்கும்.. அப்போ சென்னையில் ? தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வார்னிங்

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று தமிழ்நாட்டுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் அளிக்கப்பட்டுள்ளது. சேலம், திருச்சி, நாமக்கல், திருவண்ணாமலை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios