இந்த 5 மாவட்டங்களில் அனல் தகிக்கும்.. அப்போ சென்னையில் ? தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வார்னிங்

வேலூர், கரூர், திருச்சி, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

strong sea breeze hits chennai but these districts to  sizzle says tamilnadu weatherman Rya

கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். ஏப்ரல் மாதத்திலேயே இப்படி வெயில் சுட்டெரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

அதற்கேற்ப நாட்டின் பல மாநிலங்களில் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை பொறுத்து அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை இந்திய வானிலை மையம் விடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அவ்வப்போது சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி, நாமக்கல், மதுரை, வேலூர், தருமபுரி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி உள்ளது. மே 28 வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என்பதால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ்.!எந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.? எப்போது வெளியாகிறது.? இதோ தகவல்

இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து தமிழ்நாடு வெதமர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் " சென்னையை நோக்கி வலுவான கடல்காற்று வெகு விரைவில் வந்துவிட்டதால் இன்று நுங்கம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பமும், மீனம்பாக்கத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்பில்லை. ஆனால் அதிக ஈரப்பதம் இருப்பதால் அசௌகரியம் ஏற்படலாம். உள் தமிழக மாவட்டங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில் எந்த மாற்றமும். வேலூர், கரூர், திருச்சி, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இன்று முதல் 6-ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் வெயிலின் தாக்கம் கொடூரமாக இருக்கும்; 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios