Asianet News TamilAsianet News Tamil

இன்றும் வெயிலின் தாக்கம் கொடூரமாக இருக்கும்; 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அந்த 19 மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

india meteorological department provide yellow alert for 19 districts of tamil nadu for heat wave vel
Author
First Published May 2, 2024, 11:28 AM IST

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு சில பகுதிகளில் முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது.

அசுர வேகத்தில் பாலத்தில் இருந்து கீழே இறங்கிய தனியார் பேருந்து; திடீரென குறுக்கே பாய்ந்த லாரி - தருமபுரியில் கோர விபத்து

மேலும் கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச வெப்பத்தை மே 1ம் தேதி பதிவு செய்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 1983ம் ஆண்டு மே மாதம் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியதே உச்சபட்சமாக இருந்த நிலையில், நேற்றைய தினம் அது முறியடிக்கப்பட்டுள்ளது. 

தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம் கூட காணாமல் பிரசவத்தில் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர்.! புதுக்கோட்டையில் சோகம்

இந்நிலையில் இன்றைய தினம் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கடுமையான வெப்பம் இருக்கும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios