MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எத்தன கோடி கொடுத்தாலும் விஜய்யுடன் டான்ஸ் ஆட முடியாது... கோட் பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை- காரணம் என்ன?

எத்தன கோடி கொடுத்தாலும் விஜய்யுடன் டான்ஸ் ஆட முடியாது... கோட் பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை- காரணம் என்ன?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட பிரபல நடிகை மறுப்பு தெரிவித்துள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 03 2024, 09:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
GOAT Movie

GOAT Movie

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். இதுதவிர சினேகா, பிரபுதேவா, லைலா, பிரசாந்த், மோகன், அஜ்மல், பிரேம்ஜி, நிதின் சத்யா, வைபவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
The Greatest of All Time

The Greatest of All Time

கோட் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று இளம் வயது கேரக்டர் என்பதால் அதற்காக டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகர் விஜய்யை இளமையாக காட்ட உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அண்மையில் ரஷ்யாவில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்கிவிட்டு திரும்பிய படக்குழு எஞ்சிய படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Annamalai : பாஜக தலைவர் அண்ணாமலை.. உருவாகிறது அவரின் பயோ பிக்? அண்ணாமலையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

34
sreeleela reject thalapathy vijay starring goat movie

sreeleela reject thalapathy vijay starring goat movie

இதனிடையே கோட் படத்தில் ஐட்டம் சாங் ஒன்று இடம்பெறுவதாகவும், அதில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாட தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வரும் ஸ்ரீலீலாவை படக்குழு அணுகி இருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் உலா வந்தன. ஆனால் நடிகை ஸ்ரீலீலா அந்த வாய்ப்பை தற்போது நிராகரித்து உள்ளார். விஜய் படத்தில் ஒரு காட்சியிலாவது இடம்பெறமாட்டோமா என ஏங்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஸ்ரீலீலா விஜய்யுடன் டான்ஸ் ஆட கிடைத்த பொன்னான வாய்ப்பை நிராகரித்து இருக்கிறார்.

44
Vijay, Sreeleela

Vijay, Sreeleela

ஏனெனில் அவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகவே விரும்புகிறாராம். அதனால் தற்போதைக்கு ஐட்டம் சாங்கிற்கு டான்ஸ் ஆட முடியாது என கூறிவிட்டாராம். விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீலீலாவிற்கு அதே வேளையில் அஜித் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம் ஸ்ரீலீலா. இதன்மூலம் கோலிவுட்டில் அறிமுக படத்திலேயே டாப் ஹீரோவுடன் ஸ்ரீலீலா நடிக்க உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... Good Bad Ugly : அஜித் நடிக்கப்போவது எத்தனை ரோலில் தெரியுமா?ஆதிக் போடும் மாஸ்டர் பிளான் - தீயாய் பரவும் தகவல்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved