04:23 PM (IST) Jul 30

தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை: ரூ.621 கோடியில் 4 வழி உயர்மட்டப் பாலம்!

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் 4 வழி உயர்மட்டப் பாலம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது

03:48 PM (IST) Jul 30

இதெல்லாம் எனக்கு சாதாரணம்; சும்மா இருக்க மாட்டோம்: அன்புமணி வார்னிங்!

தமிழகத்தின் அரசியல் எல்லாம் தனக்கு சர்வ சாதாரணமானது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

03:42 PM (IST) Jul 30

Free OTT : டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை 3 மாதத்துக்கு இலவசமாக பார்க்கலாம்.. முழு விபரம் இதோ !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் 3 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. இத்திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

03:27 PM (IST) Jul 30

2000 ரூபாய் முதலீடு போதும்.. 1 லட்சத்துக்கும் மேல் சேமிக்கலாம் - சிறந்த போஸ்ட் ஆபிஸ் ஆர்டி திட்டம் இதோ !!

ஜூலை 1 முதல் தபால் அலுவலக RDக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்களுடன் ரூ. 2000, 3000, 4000 மற்றும் 5000 ஆகிய ஆர்டியில் உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

02:45 PM (IST) Jul 30

அண்ணாமலை குற்றாலத்தில் சிகிச்சை எடுக்கலாம்: ஈவிகேஸ் இளங்கோவன்!

பாஜகவுக்கு சாவு மணி அடிப்பதற்கு அண்ணாமலை யாத்திரையை தொடங்கி இருக்கிறார் என ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஸ் இளங்கோவன் சாடியுள்ளார்

02:45 PM (IST) Jul 30

யாத்திரைக்கு நடுவே மக்களோடு அமர்ந்து ‘மான் கி பாத்’ கேட்ட அண்ணாமலை!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது யாத்திரைக்கு நடுவே மக்களோடு அமர்ந்து பிரதமர் மோடியின் மான் கி பாத் உரையை கேட்டார்

02:00 PM (IST) Jul 30

Tamil Nadu Rain Update : தமிழகத்தில் கொட்டி தீர்க்கபோகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் அப்டேட்

தமிழகத்தில் வரும் வாரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னைவானிலை மையம் வெளியிட்டுள்ளது.

01:24 PM (IST) Jul 30

மணிப்பூர் பெண்கள் விவகாரம்: மனித நேய மக்கள் கட்சி பேனருக்கு எதிர்ப்பு!

மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி வைத்துள்ள பேனர் சர்ச்சையை ஏஎற்படுத்தியுள்ளது

01:23 PM (IST) Jul 30

செமிகண்டக்டர் துறையில் விரைவான முன்னேற்றம்: ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்!

பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்தியா தனது செமிகண்டக்டர் லட்சியங்களை அடைவதில் விரைவான முன்னேற்றங்களை அடைந்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

12:58 PM (IST) Jul 30

Jio Plan : ரூ.123 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்.. 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் - முழு விபரம் இதோ !!

ஜியோவின் ரூ.123 ரூபாய்க்கான புதிய திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இத்திட்டத்தை பற்றி முழுமையாக இங்கு காணலாம்.

12:36 PM (IST) Jul 30

ஷாக்கிங் நியூஸ்! கள்ளத்தொடர்பால் பிறந்த 2 பெண் சிசுக்கள் குப்பைத் தொட்டியில் வீச்சு? கடித்து குதறிய நாய்கள்

திண்டுக்கல்லில் குப்பைத்தொட்டியில் இருந்து இறந்த நிலையில் 2 சிசுக்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

12:24 PM (IST) Jul 30

ஈரோடு: முதன் முறையாக நடைபெற்ற ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகம் !!

ஈரோடு பெரியார் நகரில் உள்ள 80 அடி சாலையில், ஜே.சி.ஐ. ஈரோடு சார்பில், ‘ஃபன் ஸ்ட்ரீட்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

12:09 PM (IST) Jul 30

ஒன்றிய அரசு சுகாதாரத் திட்டம் - சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை ஏற்பு!

ஒன்றிய அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் சித்த மருத்துவமனைகளிலும் இலவச மருத்துவம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

12:09 PM (IST) Jul 30

பாஜகவுக்கு இங்க வாய்ப்பில்ல ராஜா - விஜய் வசந்த் எம்.பி.,!

தமிழகத்தில் பாஜக அடியெடுத்து வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால், பாஜகவுக்கு இங்கு வாய்ப்பில்லை என விஜய் வசந்த் எம்.பி., தெரிவித்துள்ளார்

12:08 PM (IST) Jul 30

என்எல்சி விவகாரம் - கே.பாலகிருஷ்ணன்!

என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

12:00 PM (IST) Jul 30

From The India Gate : எதிர்க்கட்சி தலைவர் போட்டியில் குழம்பும் பாஜக.. கரைசேருமா கர்நாடகா காங்கிரஸ்

ஏசியாநெட்நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 35வது எபிசோட்.

11:03 AM (IST) Jul 30

Electric Scooters : ரூ.28 ஆயிரத்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. அட்டகாசமான அம்சங்கள் - முழு விபரம் இதோ !!

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

10:52 AM (IST) Jul 30

பாஜக நிர்வாகிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அண்ணாமலை

வாடகை வீட்டில் வசிக்கும் கட்சி நிர்வாகிக்கு நிலம் பார்க்க சொல்லி அவரை திக்குமுக்காடச் செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

10:51 AM (IST) Jul 30

தேர்தல் வெற்றி: ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தேர்தல் வெற்றி செல்லாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்

10:38 AM (IST) Jul 30

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இந்த ரயில்கள் அடுத்த வாரம் ரத்து - முழு விபரம் இதோ !!

பல ரயில்கள் 31 ஜூலை மற்றும் 3 ஆகஸ்ட் 2023 வரை ரத்து செய்யப்படும் என்றும், இது தவிர சில ரயில்கள் குறுகிய காலத்தில் நிறுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.