'3 சென்ட் நிலம் பாருங்கண்ணா': ஆன் தி ஸ்பாட்டில் பாஜக நிர்வாகிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அண்ணாமலை!
வாடகை வீட்டில் வசிக்கும் கட்சி நிர்வாகிக்கு நிலம் பார்க்க சொல்லி அவரை திக்குமுக்காடச் செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்திலிருந்து நடைபயணம் தொடங்கியுள்ளார். இந்நிலையில் ராமேஸ்வரம் நகர பாஜக நிர்வாகி முருகன் இல்லத்துக்கு அமித்ஷாவை அண்ணாமலை அழைத்து செல்வது போன்ற திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேரமின்மை காரணமாக கோயில் விசிட்டை முடித்துக் கொண்டு அமித் ஷா புறப்பட்டுச் சென்றுவிட்டார் இதனால் பாஜக நிர்வாகி முருகன் வீட்டுக்கு அண்ணாமலை மட்டும் கட்சியினருடன் சென்று தேநீர் அருந்தினார். அப்போது முருகனின் ஏழ்மை நிலை குறித்து அறிந்த அண்ணாமலை, வாடகை வீட்டில் வசித்து வருவது பற்றியும் கேட்டறிந்தார்.
இதையடுத்து, ஆன் தி ஸ்பாட்டிலேயே பக்கத்தில் நின்ற பாஜக முக்கிய பிரமுகரிடம், 3 சென்ட் நிலம் பாருங்கண்ணா, நிலத்தை முருகனுக்கு நாமே வாங்கிக் கொடுத்துவிடுவோம் என அண்ணாமலை கூறினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பாஜக நிர்வாகி முருகன், திக்குமுக்காடி விட்டார். தன்னை விட அண்ணாமலை வயதில் குறைந்தவர் என்றாலும் நன்றி சொல்வதற்காக காலில் விழ முயன்றார். ஆனால், அவரை தடுத்து நிறுத்திய அண்ணாமலை, அதெல்லாம் கூடாது என்றார்.
தேர்தல் வெற்றி: ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
நடைபயணம் தொடங்கிய முதல் நாளே பாஜக நிர்வாகிக்கு 3 செண்ட் நிலம் வாங்கிக் கொடுப்பதாக சர்ப்ரைஸ் அளித்து சொந்தக்கட்சியினர் மத்தியில் தனது இமேஜை உயர்த்தியிருக்கிறார் அண்ணாமலை.