அமைச்சரவை இலாக்கா மாற்றம் தொடர்பாக ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
Tamil News highlights : இலாக்காக்கள் மாற்றம்: பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு?

Tamil News highlights | செந்தில் பாலாஜி வசமிருந்த அமைச்சரவை இலாக்காக்களை மாற்றம் செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இலாக்கா மாற்றம்: ஆளுநருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்
செந்தில் பாலாஜி இலாக்காக்கள் மாற்றம்: பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு?
செந்தில் பாலாஜி வசமிருந்த அமைச்சரவை இலாக்காக்களை மாற்றம் செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
காவேரி மருத்துவமனை அழைத்துச் செல்லப்படும் செந்தில் பாலாஜி
ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனை அழைத்துச் செல்லப்படுகிறார் செந்தில் பாலாஜி
கலைஞர் மருத்துவமனை இங்கே... எய்ம்ஸ் எங்கே?
பதினைந்தே மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்
உயர் நீதிமன்றம் அனுமதி
காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ரோடு போட்டு அசத்தியவர் ஸ்டாலினுக்கு போடுவாரா? யார் இந்த முத்துசாமி?
ஜெயலலிதாவுக்கு ரோடு போட்டு அசத்தியவர் ஸ்டாலினுக்கு போடுவாரா? யார் இந்த முத்துசாமி?
அடப்பாவமே... அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகரின் கால் கட்டைவிரல் அகற்றம்
தமிழ் திரையுலகில் வடிவேலு உடன் இணைந்து பல்வேறு காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனின் கால் கட்டைவிரல் அகற்றப்பட்டு உள்ளது.
அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதி! திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா செந்தில் பாலாஜி? பாஜக
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு இன்று விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்? மத்திய அரசு மருத்துவர்களின் அறிக்கையை நிராகரித்த அமலாக்கத்துறை?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க தயாராக உள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது.
Today Gold Rate in Chennai : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலை சரசரவென குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
செத்தா... லோகேஷ் கனகராஜ் படத்துல தான் சாகணும் - பிரபல பாலிவுட் இயக்குனரின் வினோத ஆசை
பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அனுராக் கஷ்யப், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படத்தில் சாக வேண்டும் என பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
வடிவேலு காமெடியால் தான் அந்தப் படம் ஹிட் ஆகல... என்ன சுந்தர்.சி பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
தலைநகரம் 2 படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சுந்தர் சி, வடிவேலு காமெடியால் ஒரு படம் பிளாப் ஆனதாக கூறி இருக்கிறார்.
தமிழக அரசை மிரட்டி பார்க்க நினைக்கிறீங்களா! உங்க பாச்சா இங்க பலிக்காது! பாஜகவை திருப்பி அடிக்கும் வேல்முருகன்
அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடிகளின் மீது நடவடிக்கை எடுக்க துப்பற்ற ஒன்றிய அரசு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறிய செந்தில் பாலாஜியை கைது செய்ய நினைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என வேல்முருகன் கூறியுள்ளார்.
கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இன்று திறப்பு
சென்னை கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
நகராட்சி அலுவலக வாசலில் பயங்கரம்... திமுக பெண் பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை..!
செங்கோட்டை நகராட்சி அலுவலக வாசலில் திமுக செயற்குழு உறுப்பினரின் மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடி தடைக்காலம் நிறைவு
மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து சென்னை காசிமேட்டிலிருந்து மீன் பிடிக்க நள்ளிரவில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள்.
சென்னையில் 390வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் 390வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.