நகராட்சி அலுவலக வாசலில் பயங்கரம்... திமுக பெண் பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை..!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சார்ந்தவர் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன்.  இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி திமுக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். 

dmk executive committee members son murder in sengoottai

செங்கோட்டை நகராட்சி அலுவலக வாசலில் திமுக செயற்குழு உறுப்பினரின் மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சார்ந்தவர் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன்.  இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி திமுக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் ஏற்கெனவே தென்காசி மாவட்டம்  தென்காசி ஒன்றிய குழுத் தலைவராக பதவி  வகித்தவர். இவருடைய மூத்த மகன் ராஜேஷ். செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சுகாதாரத் தூய்மைப் பணிகள் திட்டத்தின் மேற்பார்வையாளராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க;- நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டா இப்படியாடா பண்ணுவ? மனைவியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்..!

dmk executive committee members son murder in sengoottai

இந்நிலையில், நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே இருசக்கர வாகனத்தில் ராஜேஷ் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, பின்னால் இரண்டு பேர் ராஜேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பினர். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

dmk executive committee members son murder in sengoottai

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து நகராட்சி அலுவலகத்தை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

இதையும் படிங்க;-  உல்லாசத்து இடையூறு! குழம்பில் விஷம்! உடம்பில் மின்சாரம்! கணவன் துடிதுடித்து கொலை.. மனைவி சிக்கியது எப்படி?

dmk executive committee members son murder in sengoottai

இதனையடுத்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  சமாதானப்படுத்தினர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மூர்த்தி(22), மாரி(19) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios