அடப்பாவமே... அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகரின் கால் கட்டைவிரல் அகற்றம்
தமிழ் திரையுலகில் வடிவேலு உடன் இணைந்து பல்வேறு காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனின் கால் கட்டைவிரல் அகற்றப்பட்டு உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு, அவருடன் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர்கள் ஏராளம். அப்படி வடிவேலு உடன் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் தான் பாவா லட்சுமணன். வடிவேலு உடன் சேர்ந்து மாயி படத்தில் இவர் நடித்த வாமா மின்னல் காமெடி இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் அரசு படத்தில் குடிகாரன் வேடத்தில் வந்து குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார் பாவா லட்சுமணன்.
சமீபகாலமாக படங்களில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் பாவா லட்சுமணன், சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பாவா லட்சுமணனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, சக்கரை நோயின் தாக்கம் காரணமாக அவரது கால் கட்டைவிரலையும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... தியேட்டர் பிசினஸில் இறங்கும் சிவகார்த்திகேயன்... பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் ரெடியாகிறது - அதுவும் இந்த ஊரிலா?
இதையடுத்து அண்மையில் பேட்டி ஒன்று அளித்திருந்த நடிகர் பாவா லட்சுமணன், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆனவுடன் நான் இறந்துவிட்டதாக கூறி போஸ்டரெல்லாம் ஒட்டப்பட்டது வேதனை அளித்ததாக தெரிவித்தார். தனக்கு இப்படி ஆனது தெரிந்ததும், சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்கள் போன் போட்டு நலம் விசாரித்ததாக கூறியுள்ள பாவா லட்சுமணன், வடிவேலு பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சுகர் மாத்திரைகூட வாங்க முடியாத சூழலில் தான் இருப்பதாகவும் அந்த பேட்டியில் மனம் வருந்தி பேசி இருக்கிறார். காமெடி வேடங்களில் நடித்து மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த கலைஞனுக்கு இப்படி கஷ்டப்பட்டு வருவதை பார்த்த ரசிகர்கள், அவருக்கு முன்னணி நடிகர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பிளாக் அண்ட் ஒயிட் கண்ணு உன்ன பார்த்தா கலரா மாறுது... தாறுமாறு கவர்ச்சியில் தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன்