12:31 AM (IST) Jun 12

25 சீட் ஓகே? அமித்ஷா பேசுறது.! நாங்க தான் முடிவு எடுப்போம் - பாஜகவுக்கு கட்டையை போடும் அதிமுக தலைவர்கள்

தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்வதுதான் இலக்கு என அதிரடியாக கூறினார் அமித்ஷா. இது அதிமுக தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

11:53 PM (IST) Jun 11

From the India Gate: கர்நாடகாவில் ப்ரெண்ட்ஸ் ஆன எதிரிகள்.. கேரளாவில் வெடித்த புது மோதல்.!!

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 28வது எபிசோட்.

11:32 PM (IST) Jun 11

இபிஎஸ் & ஓபிஎஸ்சை சந்திக்காத அமித்ஷா.. என்னவா இருக்கும்? அண்ணாமலை கொடுத்த அடடே பதில் !!

சென்னையில் இன்று பேட்டியளித்த அமித்ஷா, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்வதுதான் இலக்கு என அதிரடியாக கூறினார். இது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றே சொல்லலாம்.

11:12 PM (IST) Jun 11

பூரி ஜெகன்நாத் ரத யாத்திரை 2023: ஜெகன்நாதர் கோயில் சிலைகள் எலும்பால் செய்யப்பட்டதா.?

ஜெகன்நாத் கோவில் ரத யாத்திரை இந்த ஆண்டு ஜூன் 20-ம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் பின்னணியில் ஜெகநாதர் கோயிலின் ரகசியம் ஒன்றை தெரிந்து கொள்ளலாம்.

10:43 PM (IST) Jun 11

9+9=18.. மொத்தம் 25 எம்.பி சீட் கன்பார்ம்.! வேலூரில் அமித்ஷா பேசியதை கவனிச்சீங்களா !!

தமிழ் மொழியின் தொன்மைக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையை பேசி வருகிறார். தமிழின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் என்று பேசியுள்ளார் அமித்ஷா.

08:44 PM (IST) Jun 11

உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் - மார்னிங் கன்சல்ட் சர்வே தகவல்

உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 77 சதவீத அங்கீகாரத்துடன் முதலிடத்தில் உள்ளார்.

07:47 PM (IST) Jun 11

அதிரடியாக விலை குறைந்த Samsung Galaxy S22! இவ்வளவுதானா.! சூப்பர் டீலை மிஸ் பண்ணிடாதீங்க !!

Samsung Galaxy S22 விலை தற்போது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. நல்ல விலையில் சாம்சங்கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனை வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

07:08 PM (IST) Jun 11

வெறித்தனமாக சண்டை போட்ட திமுக கவுன்சிலர் & வார்டு செயலாளர்.. கோவையில் அதிர்ச்சி - வைரல் வீடியோ !!

கோவையில் திமுககவுன்சிலர் மற்றும் வார்டு செயலாளர் தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

06:20 PM (IST) Jun 11

மகாராஜா கல்லூரி மதிப்பெண் பட்டியல் சர்ச்சை: ஏசியாநெட் நியூஸ் நிருபர் மீது வழக்கு.. CPI ஆதரவு !!

திருவனந்தபுரம்மகாராஜா கல்லூரியில்மதிப்பெண் பட்டியல் சர்ச்சை குறித்து செய்தி வெளியிட்ட ஏசியாநெட் நியூஸ் தலைமை நிருபர் அகிலா நந்தகுமார் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

05:58 PM (IST) Jun 11

தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணிக்கு இப்படியொரு நிலைமையா.? அன்றே கணித்து சொன்ன அன்புமணி ராமதாஸ்

தாமிரபரணியை சுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

05:28 PM (IST) Jun 11

கோழி சாப்பிடுவதால் Antimicrobial Resistance நோய் உருவாகிறதா.? வதந்திகளை நம்ப வேண்டாம்.! IVPI விளக்கம்

உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ள 10வது பெரிய நோயான ஏஎம்ஆர், அதிகளவு கோழியை உணவாக உட்கொள்வதால் ஆபத்து இருப்பதாக கோழிப்பண்ணை தொழில்துறை கால்நடை மருத்துவர்கள் சங்கம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி தவறானது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

03:07 PM (IST) Jun 11

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொல்ல போகிறாரா தளபதி விஜய்...?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

02:39 PM (IST) Jun 11

இனிமே வாடிவாசலுக்காக காத்திருக்க முடியாது... வெற்றிமாறனால் பொறுமை இழந்து நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு

வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் மேலும் தாமதம் ஆவதால், நடிகர் சூர்யா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

02:06 PM (IST) Jun 11

கதை கேட்டதும் படம் பிளாப் ஆகும்னு சொன்னாரு.. ஆனாலும் நடிச்சாரு - அஜித் பற்றி பிரபல இயக்குனர் சொன்ன பகீர் தகவல்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தான் நடித்த படம் பிளாப் ஆகும் என அப்படத்தின் கதை கேட்ட உடனே தெரிவித்த சம்பவம் பற்றி பிரபல இயக்குனர் மனம்திறந்து பேசி உள்ளார்.

01:38 PM (IST) Jun 11

முதன்முறையாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி அதகளப்படுத்திய தர்ஷா குப்தா

பிறந்தநாளை கொண்டாட அந்தமானுக்கு சென்றிருந்த நடிகை தர்ஷா குப்தா, அங்கு பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்கும் விதமாக தான் முதன்முறையாக நடத்தியுள்ள பிகினி போட்டோஷூட்டின் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் தர்ஷா. 

12:50 PM (IST) Jun 11

வைரமுத்து எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்... சின்மயியை தொடர்ந்து மற்றுமொரு பாடகி பரபரப்பு புகார்

வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பின்னணி பாடகி வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

11:45 AM (IST) Jun 11

மருதநாயகம் முதல் யோஹன் வரை... ஆஹா ஓஹோனு பில்-டப் கொடுத்து தொடங்கி பாதியிலேயே கைவிடப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ

கமலின் மருதநாயகம், விஜய்யின் யோஹன், அஜித்தின் மிரட்டல் உள்பட ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்கள் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே கைவிடப்பட்டு இருக்கின்றன. அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

10:27 AM (IST) Jun 11

வெளிநாட்டு பப்பில் ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தா... வைரலாகும் வீடியோ

சிட்டாடெல் வெப் தொடரின் படப்பிடிப்புக்காக செர்பியா நாட்டுக்கு சென்றுள்ள நடிகை சமந்தா, அங்குள்ள பப்பில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

09:45 AM (IST) Jun 11

இரண்டு திருமணம் செய்துகொண்டாரா நீலிமா? அப்போ முதல் கணவர் யார்? - ரசிகர்களின் தேடலுக்கு விடை கொடுத்த நடிகை

நடிகை நீலிமா ராணியின் முதல் கணவர் யார் என்பது குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது குறித்து அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

08:48 AM (IST) Jun 11

மாவீரன் படத்தை வாங்கி படாதபாடு படுத்தும் ரெட் ஜெயண்ட்டிடம் சூப்பர் ஸ்டார் பாணியில் டீல் பேசிய சிவகார்த்திகேயன்

மாவீரன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கி உள்ள ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் சிவகார்த்திகேயன் முக்கிய டீல் ஒன்றை பேசி உள்ளாராம்.