கதை கேட்டதும் படம் பிளாப் ஆகும்னு சொன்னாரு.. ஆனாலும் நடிச்சாரு - அஜித் பற்றி பிரபல இயக்குனர் சொன்ன பகீர் தகவல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தான் நடித்த படம் பிளாப் ஆகும் என அப்படத்தின் கதை கேட்ட உடனே தெரிவித்த சம்பவம் பற்றி பிரபல இயக்குனர் மனம்திறந்து பேசி உள்ளார்.
இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் லிங்குசாமி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு முரளி, மம்முட்டி, அப்பாஸ், சினேகா நடிப்பில் வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆனந்தம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் மாதவன் உடன் கூட்டணி அமைத்த லிங்குசாமி, ரன் படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்ததோடு லிங்குசாமியின் கெரியரில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி அடுத்ததாக அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூன்றாவது படத்திலேயே அஜித் போன்ற மாஸ் நடிகருடன் கூட்டணி அமைத்த லிங்குசாமி, அவரை வைத்து ஜி என்கிற திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, மணிவண்ணன், வெங்கட்பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், இப்படத்தின் கதைக்கு அஜித் செட் ஆகாததால் இப்படம் தோல்வியை தழுவியது.
அஜித் படத்தின் தோல்வியில் இருந்து மீளும் விதமாக அதே ஆண்டில் விஷால் நடித்த சண்டைக்கோழி திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு வெற்றிகண்டார் லிங்குசாமி. இதனிடையே பேட்டி ஒன்றில் ஜி படத்தின் தோல்வி குறித்தும், அப்படம் அஜித் நடிக்க வேண்டிய படமே இல்லை எனவும் இயக்குனர் லிங்குசாமி பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பிறந்தநாளுக்கு கவர்ச்சி விருந்து... முதன்முறையாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி அதகளப்படுத்திய தர்ஷா குப்தா
அதில் அவர் கூறியதாவது : “ஜி படத்தில் அஜித் ஸ்டூடண்ட் கேரக்டர் பண்ணக்கூடாது என நினைத்தேன். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் தான் அப்படத்தை எடுக்க வேண்டியதாயிற்று. அந்தக் கதைக்கு நான் அஜித்தை யோசிக்கவே இல்லை. அதில் சித்தார்த்தை நடிக்க வைக்க வேண்டும் என்று தான் இருந்தேன். அந்த மாதிரி ஹீரோ பண்ண வேண்டிய படம் தான் அது. அஜித்தும் அதை பீல் பண்ணினார்.
ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குவதற்கு முந்தைய நாள் தான் அஜித் என்னிடம் கதையே கேட்டார். கதையை கேட்டதும் இந்த படம் நல்லா வராதுனு அஜித் சொல்லிவிட்டார். அதுமட்டுமின்றி வேற கதை யோசிக்குமாறு கூறினார். ஆனால் என்னுடன் இருந்தவர், அஜித் அப்படித்தான் சொல்லுவார், நாம படத்தை எடுப்போம்னு சொன்னாங்க. படம் நல்லா வரும்னு அவர்கள் நம்பினார்கள்” என கூறினார். ஆனால் படத்தின் ரிசல்ட் அஜித் சொன்னபடி தான் நடந்தது.
இதையும் படியுங்கள்... வைரமுத்து எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்... சின்மயியை தொடர்ந்து மற்றுமொரு பாடகி பரபரப்பு புகார்