உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 77 சதவீத அங்கீகாரத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 77 சதவீத அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 2022ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடியின் அங்கீகாரம் 75 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக சர்வே காட்டுகிறது.
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து, உலக நாடுகளால் நாட்டின் கண்ணோட்டம் வெகுவாக மாறிவிட்டது. உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 77 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டில் பிரதமர் மோடி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஆகஸ்ட் 2019 முதல் மார்னிங் கன்சல்ட் தொகுத்து வரும் உலகளாவிய தலைமைத்துவ ஒப்புதல் திட்டம் செயல்பாட்டில் இருந்து, பிரதமர் மோடி 71%க்கும் அதிகமான மதிப்பீடு மூலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். 2022ல் இருந்து பிரதமர் மோடியின் அங்கீகாரம் 75%க்கும் அதிகமாக உள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரதமர் மோடி முன்னேறியுள்ளார். 22 உலகத் தலைவர்களை ஆய்வு செய்த கருத்துக்கணிப்பின்படி, 22 முக்கிய நாடுகளின் நான்கு உலகத் தலைவர்கள் மட்டுமே 50% க்கும் அதிகமான சதவீத ஆதரவுகளை பெற்றுள்ளனர். மே 30 முதல் ஜூன் 6, 2023 வரை சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சமீபத்திய சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..தமிழகத்தை சேர்ந்த 25 பேர்.. தேர்வு செய்த தமிழக பாஜக.! அமித்ஷாவுடன் திடீர் மீட்டிங் - முழு பின்னணி
ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, செக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து, நார்வே, போலந்து, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவில் கருத்துக்கணிப்பு அரசியல் பிரமுகர்களின் பொதுக் கருத்தையும் தேசியப் போக்குகளையும் கண்காணிக்கிறது. மார்னிங் கன்சல்ட் சர்வே, ஒவ்வொரு நாளும் 20,000 க்கும் மேற்பட்ட உலகளாவிய ஆன்லைன் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
இதையும் படிங்க..2024 தேர்தல் முதல் ஜிஇ ஒப்பந்தம் வரை.. பிரதமர் மோடியின் அமெரிக்கா டூர் பிளான் - ஜோ பைடன் போட்ட புது ஸ்கெட்ச்
