மாவீரன் படத்தை வாங்கி படாதபாடு படுத்தும் ரெட் ஜெயண்ட்டிடம் சூப்பர் ஸ்டார் பாணியில் டீல் பேசிய சிவகார்த்திகேயன்
மாவீரன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கி உள்ள ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் சிவகார்த்திகேயன் முக்கிய டீல் ஒன்றை பேசி உள்ளாராம்.
பிரின்ஸ் படத்தின் படுதோல்விக்கு பின் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் மாவீரன். யோகிபாபு நடிப்பில் வெளியாகி 2 தேசிய விருதுகளை வென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் தான் மாவீரன் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்தின் மூலம் வில்லனாக எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
இதுதவிர யோகிபாபு, புஷ்பா வில்லன் சுனில், நடிகை சரிதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து உள்ளார். மாவீரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
மாவீரன் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல மாதங்களுக்கு முன்னரே வாங்கிவிட்டது. அந்நிறுவனத்தில் கைவசம் சென்றதால் இப்படம் படாத பாடு பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். முதலில் இப்படத்தை ஜூன் மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் ரெட் ஜெயண்ட் தயாரித்த மாமன்னன் படம் ரிலீஸ் ஆவதால், ஆகஸ்ட் மாதத்திற்கு மாவீரன் படத்தை தள்ளி வைத்ததோடு ஆகஸ்ட் 11-ந் தேதி ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்தது குத்தமா... தயாரிப்பாளரிடம் ரூ.40 லட்சம் பில்-ஐ நீட்டி அதிர்ச்சி கொடுத்த தமன்
இதனிடையே ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாகும் என அறிவிப்பு வந்தது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையும் ரெட் ஜெயண்ட் வசம் உள்ளதால், மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் மாற்றி, அப்படம் ஜூலை 14-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். தன் படத்தை வாங்கி ரெட் ஜெயண்ட் நிறுவனம் பந்தாடி வருவதைப் பார்த்து டென்ஷன் ஆன சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
அதன்படி மாவீரன் படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் இருந்து தனக்கும் ஷேர் வேண்டும் என ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் தடாலடியாக கூறிவிட்டாராம். வழக்கமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் இதுபோன்று லாபத்தில் இருந்து ஷேர் வாங்கிக் கொள்ளும் வகையில் டீல் பேசுவார். தற்போது சூப்பர்ஸ்டார் பாணியை பின்பற்றி ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் சிவகார்த்திகேயன் டீல் பேசி உள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மாவீரன் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்கிற நம்பிக்கையில் தான் சிவா இந்த டீலை பேசியுள்ளாராம்.
இதையும் படியுங்கள்... ரஜினிகாந்த் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஆஸ்திரேலிய துணைத் தூதர் - ஓஹோ இதுதான் விஷயமா!