MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினிகாந்த் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஆஸ்திரேலிய துணைத் தூதர் - ஓஹோ இதுதான் விஷயமா!

ரஜினிகாந்த் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஆஸ்திரேலிய துணைத் தூதர் - ஓஹோ இதுதான் விஷயமா!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வந்த ஆஸ்திரேலியா துணைத் தூதர் ஓஃபேரல், சூப்பர்ஸ்டாரை சந்தித்து பேசினார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 11 2023, 07:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதற்காக 70 வயதைக் கடந்த போதிலும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் ரஜினி. அவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

24

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற கெஸ்ட் ரோலில் ரஜினி நடிக்கிறார். இதையடுத்து ரஜினியின் 170-வது திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகர் ரஜினியுடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இதன்மூலம் 32 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... அம்மாவுக்காக புதிய வீட்டை இடித்த சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்! ஏன் தெரியுமா?

34

இப்படி ரஜினியின் 170-வது படம் குறித்து சுட சுட அப்டேட்டுகள் வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில், ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ரஜினியுடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய நாட்டு துணைத் தூதர் ஓஃபேரல் மற்றும் சாரா ஆகியோர் சந்தித்த புகைப்படம் தான் அது. அவர்கள் இருவரும் ரஜினியின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்து ரஜினியை சந்தித்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடி உள்ளனர்.

44

இந்த சந்திப்பு குறித்து ஓஃபேரல் கூறியுள்ளதாவது : “கலாச்சாரத்தையும், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான நட்பை இணைக்கிறது சினிமா. புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் நடிப்பில் வெளிவர உள்ள ஜெயிலர் திரைப்படத்திற்காக வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டு ரஜினியை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவரும் ரஜினியின் தீவிர ரசிகர் என தெரிகிறது. மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்... சரத்குமாருக்காக வேளாங்கன்னி மாதாவை பிராத்திக்கிறேன்! புகழாரம் சூட்டும் மெகா தயாரிப்பாளர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved