9+9=18.. மொத்தம் 25 எம்.பி சீட் கன்பார்ம்.! வேலூரில் அமித்ஷா பேசியதை கவனிச்சீங்களா !!
தமிழ் மொழியின் தொன்மைக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையை பேசி வருகிறார். தமிழின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் என்று பேசியுள்ளார் அமித்ஷா.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலூரில் நடைபெற்ற சாதனை விளக்க பொது கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12,000 கோடி ஊழல் நடைபெற்றது. கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் நடைபெறவில்லை. காங்கிரசும், திமுகவும் ஊழல் மட்டுமே செய்யும் கட்சிகள். காங்கிரஸ் - திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் ஏன் எய்ம்ஸ் கொண்டு வரவில்லை.
இதையும் படிங்க..தமிழகத்தை சேர்ந்த 25 பேர்.. தேர்வு செய்த தமிழக பாஜக.! அமித்ஷாவுடன் திடீர் மீட்டிங் - முழு பின்னணி
திமுக 18 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தும் ஏன் ஒரு எய்ம்ஸ் கூட தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. தமிழ் மொழியின் தொன்மைக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையை பேசி வருகிறார். தமிழின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிர தமிழ் சங்கமம் நடத்தி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. திருக்குறளை 23 மொழிகளில் மொழி பெயர்த்து அனைத்து மாநில மக்களும் படிக்க வழி செய்திருக்கிறார். நீட், சிஆர்பிஎஃப் உள்ளிட்ட மத்திய தேர்வுகளை தமிழில் நடத்தி வருகிறோம். 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.2.47 லட்சம் கோடி அளவிலான திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி கொண்டு வந்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழகர்களின் தொன்மையான செங்கோல் நிறுவி சாதனை செய்துள்ளோம். மத்தியில் ஊழலற்ற சிறப்பான ஆட்சி கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2024ல் மீண்டும் 300க்கும் அதிகமாக தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய ஆட்சி அமைய உள்ளது.
தமிழ்நாட்டிற்கு பாஜக ஆட்சியில் ரூ.2.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. 9 ஆண்டில் தமிழ்நாட்டிற்கு மானியமாக ரூ.2.38 லட்சம் கோடி வழங்கியுள்ளோம். பாரதத்தை வளர்ச்சி பாதையில் பாஜக கொண்டு செல்கிறது. தமிழ்நாட்டில் மெட்ரோ திட்டங்களுக்காக ரூ.72,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்க ரூ.58,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பெயர் எடுத்துள்ளவர் அண்ணாமலை. அண்ணாமலையின் செயல்பாட்டால் 25 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கிராமங்கள் தோறும் பாஜகவை கொண்டு சென்ற அண்ணாமலைக்கு என்னுடைய பாராட்டுகள்” என்று பேசினார் அமித்ஷா.
இதையும் படிங்க..வெறித்தனமாக சண்டை போட்ட திமுக கவுன்சிலர் & வார்டு செயலாளர்.. கோவையில் அதிர்ச்சி - வைரல் வீடியோ !!