இரண்டு திருமணம் செய்துகொண்டாரா நீலிமா? அப்போ முதல் கணவர் யார்? - ரசிகர்களின் தேடலுக்கு விடை கொடுத்த நடிகை
நடிகை நீலிமா ராணியின் முதல் கணவர் யார் என்பது குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது குறித்து அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
சிறுவயதில் இருந்தே நடித்து வருபவர் நீலிமா ராணி. இவர் முதன்முதலில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து ஜெயம் ராஜா இயக்கிய சந்தோஷ் சுப்ரமணியம், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா, ஜோதிகா நடித்த மொழி உள்பட ஏராளமான திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார் நடிகை நீலிமா ராணி.
சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், நீலிமாவுக்கு பெயரை பெற்றுத்தந்தது சின்னத்திரை சீரியல்கள் தான். சின்னத்திரையில் 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள நீலிமாவுக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். குறிப்பாக இவர் வில்லியாக நடித்த தொலைக்காட்சி தொடர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தன. மெட்டி ஒலி, கோலங்கள், அரண்மனை கிளி, வாணி ராணி போன்ற தொடர்களில் நீலிமாவின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டன.
நடிப்பைத் தாண்டி தொகுப்பாளினியாகவும் தன் திறமையை காட்டியுள்ள நீலிமா, 2008-ம் ஆண்டு இசைவானன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தன்னைவிட 11 வயது மூத்தவரான இசைவானனை நடிகை நீலிமா திருமணம் செய்துகொண்டதை சமூக வலைதளங்களில் சிலர் கிண்டலடித்தாலும், அதற்கெல்லாம் அசராமல் பதிலடி கொடுத்து வருகிறார் நீலிமா.
இதையும் படியுங்கள்... மாவீரன் படத்தை வாங்கி படாதபாடு படுத்தும் ரெட் ஜெயண்ட்டிடம் சூப்பர் ஸ்டார் பாணியில் டீல் பேசிய சிவகார்த்திகேயன்
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நீலிமா கலந்துகொண்டபோது அதில் அவரைப் பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நீலிமாவும் பதிலளித்தார். அதன்படி நீலிமா பற்றி அதிகளவில் தேடப்பட்டது அவருக்கும், அவரது கணவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் தான். இதற்கு 11 வருடம் என பதிலளித்தார் நீலிமா.
இதற்கு அடுத்தபடியாக நீலிமாவின் முதல் கணவர் யார் என்கிற கேள்வியும் கூகுளில் அதிகளவில் தேடிப்பார்த்துள்ளனர். இந்த கேள்வியை கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்த நீலிமா, எனக்கு தெரிஞ்ச ஒரே கணவன் இசைவானன் தான். நல்லா தேடிருக்கீங்க. என்னுடைய முதல் கணவனும் இசைவானன் தான், இரண்டாவது கணவனும் இசைவானன் தான் என கூலாக பதில் அளித்துள்ளார் நீலிமா.
இதையும் படியுங்கள்... ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்தது குத்தமா... தயாரிப்பாளரிடம் ரூ.40 லட்சம் பில்-ஐ நீட்டி அதிர்ச்சி கொடுத்த தமன்