வெளிநாட்டு பப்பில் ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தா... வைரலாகும் வீடியோ
சிட்டாடெல் வெப் தொடரின் படப்பிடிப்புக்காக செர்பியா நாட்டுக்கு சென்றுள்ள நடிகை சமந்தா, அங்குள்ள பப்பில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவிற்கு, தற்போது பாலிவுட்டிலும் படிப்படியாக பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தி பேமிலி மேன் 2 என்கிற வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை சமந்தா, தற்போது சிட்டாடெல் என்கிற வெப் தொடரில் நடித்து வருகிறார். பேமிலி மேன்2 வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே தான் இந்த சிட்டாடெல் வெப் தொடரையும் இயக்கி வருகின்றனர்.
சிட்டாடெல் வெப் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இது ஆங்கிலத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த சிட்டாடெல் வெப் தொடரின் ரீமேக் ஆகும். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிட்டாடெல் வெப் தொடரின் படப்பிடிப்புக்காக தற்போது செர்பியா சென்றுள்ளது படக்குழு. அங்கு சமந்தா, வருண் தவான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்... மாவீரன் படத்தை வாங்கி படாதபாடு படுத்தும் ரெட் ஜெயண்ட்டிடம் சூப்பர் ஸ்டார் பாணியில் டீல் பேசிய சிவகார்த்திகேயன்
இந்நிலையில், செர்பியாவில் உள்ள பப் ஒன்றிற்கு சிட்டாடெல் படக்குழு சென்றுள்ளது. அப்போது அங்கு திடீரென புஷ்பா படத்தில் இடம்பெறும் ஊ அண்டாவா பாடல் ஒலிபரப்பப்பட்டது. தான் கவர்ச்சி நடனம் ஆடியிருந்த இந்த பாடல் செர்பியாவில் உள்ள பப்பில் ஒலிபரப்பப்பட்டதும் மகிழ்ச்சியில் திளைத்துப் போன நடிகை சமந்தா, அங்குள்ளவர்களுடன் சேர்ந்து அந்த பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தியளவில் மிகவும் பேமஸ் ஆன பாடலாக இருந்த ஊ அண்டாவா தற்போது உலகளவில் கவனம் பெற்று வருவது சமந்தா மட்டுமின்றி புஷ்பா படக்குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதிலும் ஐட்டம் சாங் ஒன்றை வைக்க உள்ளனர். அதில் நடனமாட நடிகை சமந்தாவை தான் படக்குழு முதலில் அணுகியது. ஆனால் சமந்தா மறுப்பு தெரிவித்துவிட்டதால், தற்போது வேறு நடிகையை தேர்வு செய்யும் பணியில் இறங்கி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... இரண்டு திருமணம் செய்துகொண்டாரா நீலிமா? அப்போ முதல் கணவர் யார்? - ரசிகர்களின் தேடலுக்கு விடை கொடுத்த நடிகை