25 சீட் ஓகே? அமித்ஷா பேசுறது.! நாங்க தான் முடிவு எடுப்போம் - பாஜகவுக்கு கட்டையை போடும் அதிமுக தலைவர்கள்

தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்வதுதான் இலக்கு என அதிரடியாக கூறினார் அமித்ஷா. இது அதிமுக தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

AIADMK leaders reaction to Amit Shah's talk of wanting 25 seats in the 2024 parliamentary elections

இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இன்று சென்னை கோவிலம்பாக்கத்தில் தனியார் மண்டபத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அமித்ஷா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியை ஜெயிக்க பாடுபடுங்கள்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 1975 பூத் உள்ளது. அதில் 128 பூத்களில் ஆட்களே இல்லாமல் உள்ளனர். எனவே பூத் கமிட்டியை வலுப்படுத்துங்கள்” என்று அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று பேட்டியளித்த அமித்ஷா, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்வதுதான் இலக்கு என அதிரடியாக கூறினார். இது அதிமுக தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

AIADMK leaders reaction to Amit Shah's talk of wanting 25 seats in the 2024 parliamentary elections

இதையும் படிங்க..இபிஎஸ் & ஓபிஎஸ்சை சந்திக்காத அமித்ஷா.. என்னவா இருக்கும்? அண்ணாமலை கொடுத்த அடடே பதில் !!

இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, “நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை அதிமுகவுக்கு உள்ளது. தேர்தல் எதுவாக இருந்தாலும் கூட்டணிக்கு அதிமுகதான் வகிக்கும். கூட்டணி பேச்சுக்கு முன்பாகவே எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பாஜக முடிவு செய்வது சரியல்ல. தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் உள்ளது. பேச்சுவார்த்தைக்கு முன்பே தொகுதி குறித்து பேசுவது ஏற்புடையதல்ல.

தொகுதிகள் குறித்து அமித்ஷா பேசியது அக்கட்சியின் நிலைப்பாடாக இருக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை அண்ணா திமுக தான் கூட்டணி முடிவுகளை எடுக்கும். அதிமுக கூட்டணி கட்சிகளின் பலம் மற்றும் செல்வாக்கை பொறுத்தே அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்குவதா அல்லது 2 தொகுதி ஒதுக்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் கருத்தை வரவேற்கிறோம்” என்று கூறினார்.

AIADMK leaders reaction to Amit Shah's talk of wanting 25 seats in the 2024 parliamentary elections

அதேபோல இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமும் கூட. திமுக குறித்த அமித்ஷாவின் குற்றச்சாட்டு சரியே. தமிழ்நாட்டில் தங்களை மீறி ஒரு தலைவர் உருவாகிவிடக் கூடாது என்பதில் திமுக குறிக்கோளாக இருந்ததுதான் வரலாறு. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை முடிவு செய்வது அதிமுகதான்.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கடைபிடித்த வழிமுறையே பின்பற்றப்படும். பாஜகவினர் முதிர்ச்சியில்லாமல் இவ்வாறு செய்கின்றனர். பாஜகவினர் எந்தெந்த தொகுதி வேண்டும் என கேட்பது அவர்களது உரிமை. ஆனால் அதுகுறித்து இறுதி முடிவு செய்வது அதிமுக தான். கட்சியை வளர்ப்பதற்காக பல இடங்களில் பாஜக கூட்டம் நடத்தலாம். அதில் தவறு இல்லை பாஜகவின் கை ஓங்கவில்லை” என்று கூறினார். விரைவில் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி பிரச்னை விஸ்வரூபம் எடுக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க..வெறித்தனமாக சண்டை போட்ட திமுக கவுன்சிலர் & வார்டு செயலாளர்.. கோவையில் அதிர்ச்சி - வைரல் வீடியோ !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios