09:18 PM (IST) Sep 08

ஜோ பைடனுடனான பேச்சுவார்த்தை குறித்து மோடி பதிவு

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் மக்களிடையேயான தொடர்பை மேலும் மேம்படுத்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும்

Scroll to load tweet…

08:43 PM (IST) Sep 08

பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது

Scroll to load tweet…

08:17 PM (IST) Sep 08

இந்தியா வந்தடைந்த கனடா பிரதமர்

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். டெல்லி விமான நிலையத்தில் கனடா பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

08:06 PM (IST) Sep 08

ரிஷி சுனக் ட்வீட்

இன்றைய உலகத் தலைவர்களைச் சந்திப்பதற்கு முன், நாளைய உலகத் தலைவர்களுடன் சந்திப்பு. டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

Scroll to load tweet…

07:18 PM (IST) Sep 08

ஜி20 உச்சி மாநாடு: இந்தியா வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார்

04:47 PM (IST) Sep 08

ஜி20: உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் - பிரதமர் மோடி!

ஜி20 மாநாட்டையொட்டி அடுத்த இரண்டு நாட்களுக்கு உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

04:21 PM (IST) Sep 08

சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

கேரளா - காங்கிரஸ் வெற்றி

உ.பி - சமாஜ்வாடி முன்னிலை

மேற்கு வங்கம் - ஆளும் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி

ஜார்கண்ட் - ஆளும் ஜே.எம்.எம். வெற்றி

திரிபுரா (2) - பாஜக இரண்டிலும் வெற்றி

உத்தரகாண்ட் - பாஜக வெற்றி

04:20 PM (IST) Sep 08

இமயம் சரிந்தது... கடைசியாக தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்த மாரிமுத்து - வைரலாகும் புகைப்படம்

நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த விழா நாயகன் படத்தின் ஷூட்டிங்கில் தனக்காக ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்துள்ளார்.

04:18 PM (IST) Sep 08

ஜி20 இரவு விருந்து: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை!

ஜி20 இரவு விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

04:18 PM (IST) Sep 08

2024 மக்களவை தேர்தல்: உறுதியாக பாஜக - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக - மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே கூட்டணி உறுதியாகியுள்ளது

03:28 PM (IST) Sep 08

மனைவியின் 25 வருட ஆசை... இறக்கும் முன் நிறைவேற்றிய எதிர்நீச்சல் மாரிமுத்து - கலங்க வைக்கும் சம்பவம்

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து, இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் தன்னுடைய மனைவியின் 25 வருட ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.

03:01 PM (IST) Sep 08

POMIS : ஒவ்வொரு மாதமும் ரூ.5000 கியாரண்டியா கிடைக்கும்.. இப்படியொரு போஸ்ட் ஆபிஸ் திட்டமா.!

அஞ்சல் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 உத்தரவாத வருமானம் கிடைக்கும். அதனைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

02:36 PM (IST) Sep 08

மாரிமுத்து இறப்பு அதிர்ச்சியளிக்கிறது! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்!

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய X பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க 

02:27 PM (IST) Sep 08

Aprilia RS 457 : பக்கா பவர்.. மாஸ் கில்லர்.. Aprilia RS 457 மாடல் அறிமுகம்.. விலை & சிறப்புகள் என்ன.?

இத்தாலிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியாAprilia RS 457 மாடலை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை காணலாம்.

02:17 PM (IST) Sep 08

கொடநாடு வழக்கு: நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்

02:04 PM (IST) Sep 08

ஜி20 உச்சி மாநாடு.. டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு.. எதற்கெல்லாம் தடை.? முழு விபரம் இதோ !!

வரலாற்று சிறப்புமிக்க ஜி20 உச்சி மாநாட்டிற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இதனையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

02:02 PM (IST) Sep 08

மாரிமுத்து மரணத்திற்கு ராதிகா முதல் வைரமுத்து வரை கண்ணீருடன் இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்..!

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டி வந்த நடிகர் மாரிமுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாராலும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத இவருடைய இழப்புக்கு, பிரபலங்கள் அடுத்தடுத்து கண்ணீர் மல்க தங்களுடைய இரங்கல்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க 

02:01 PM (IST) Sep 08

என் மகனை படிக்க வச்சது அஜித் சார் தான்! கையில இருக்குறத அப்படியே கொடுத்துடுவார்.. மாரிமுத்து பகிர்ந்த தகவல்!

இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்த இயக்குனரும் - நடிகருமான மாரிமுத்து, அஜித் செய்த உதவி குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க 

02:00 PM (IST) Sep 08

போனில் பேசிய சில நிமிடத்தில் மாரிமுத்து மரணம்! அடுத்த குணசேகரன் யார்? 'எதிர்நீச்சல்' இயக்குனர் திருச்செல்வம்!

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக அனைவரையும் ஆட்டிப்படைத்து வந்த மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் திருச்செல்வம் கடைசியாக குணசேகரனிடம் பேசிய போது அவர் கூறிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படிக்க

01:50 PM (IST) Sep 08

தந்தையின் கோட்டையை தக்க வைத்தார் சாண்டி உம்மன்: புதுப்பள்ளியில் காங்கிரஸ் அமோக வெற்றி!

புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சாண்டி உம்மன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது