மனைவியின் 25 வருட ஆசை... இறக்கும் முன் நிறைவேற்றிய எதிர்நீச்சல் மாரிமுத்து - கலங்க வைக்கும் சம்பவம்
எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து, இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் தன்னுடைய மனைவியின் 25 வருட ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.
marimuthu wife
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மாரிமுத்து. 57 வயதான இவர் இன்று காலை சீரியலுக்கு டப்பிங் பேச சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மாரிமுத்துவின் மறைவு தமிழ் சினிமாவையே உலுக்கு உள்ளது. அவரது உடலுக்கு சின்னத்திரை பிரபலங்கள் முதல், சினிமா நட்சத்திரங்கள் வரை ஏராளமானோர் படையெடுத்து வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
marimuthu family
இந்த நிலையில், நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம். நடிகர் மாரிமுத்துவின் மனைவி பெயர் பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மாரிமுத்து ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் சாதிக்க முடியாமல் கஷ்டப்பட்டபோது அவருக்கு பக்கபலமாக இருந்தது அவரது மனைவி தானாம். இதை மாரிமுத்துவே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
Ethirneechal Marimuthu
நடிகர் மாரிமுத்து கடந்த சில ஆண்டுகளாக சீரியலில் நடித்து மிகவும் பிரபலமான போதும் தனது மனைவியின் நீண்ட நாள் ஆசை ஒன்றை நிறைவேற்றாமலே இருந்துள்ளார். அது என்னவென்றால், அவரின் மனைவிக்கு, கணவர் கையால் மல்லிப்பூ வாங்கி வைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் மனைவியின் இந்த ஆசையை மட்டும் நிறைவேற்றாமல் இருந்து வந்துள்ளார் மாரிமுத்து.
இதையும் படியுங்கள்... மாரிமுத்து இறப்பு அதிர்ச்சியளிக்கிறது! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்!
marimuthu fullfill his wife wish
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தன்னுடைய மனைவியோடு காரில் சென்றபடி பேட்டி கொடுத்த மாரிமுத்து, அப்போது திடீரென காரை நிறுத்தி ரோட்டோரம் உள்ள பூக்கடைக்கு சென்று தன்னுடைய மனைவி ஆசைப்பட்ட மல்லிப்பூவை 100 ரூபாய்க்கு வாங்கி வந்து அவரே தன் கையால் மனைவிக்கு வைத்துவிட்டுள்ளார்.
தான் 25 ஆண்டுகளாக ஏங்கிய விஷயத்தை கணவர் சட்டென செய்ததும் மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி உற்சாகத்தில் திளைத்து போனார். இந்த அற்புதமான தருணம் நடந்த சில மாதங்களிலேயே மாரிமுத்து உயிரிழந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதை பார்த்த ரசிகர்கள், இறக்கும் முன் மனைவியின் ஆசையை மாரிமுத்து நிறைவேற்றியதை பார்த்து கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள்.. டப்பிங் பேசும் போது என்ன நடந்தது? நடிகர் கமலேஷ் சொன்ன தகவல்..