2024 மக்களவை தேர்தல்: உறுதியாக பாஜக - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக - மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே கூட்டணி உறுதியாகியுள்ளது

BJP JDS alliance in karnataka for 2024 election confirms BS Yediyurappa smp

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. அதேசமயம், மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும், இத்தேர்தல் பாஜகவுக்கு மிகவும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. எனவே, கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்வது, புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக - மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 4 முதல் 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

“தேவகவுடா இந்த வாரம் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். ஜேடிஎஸ் முதலில் 8 இடங்களைக் கோரியது. பாஜக மூன்று இடங்களை மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்தது. இறுதியாக, நான்கு முதல் ஐந்து இடங்களைப் பகிர்ந்து கொள்வது என ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.” என்று பிஎஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மதசார்பற்ற ஜனதாதளம் உடனான கூட்டணி எங்களுக்கு பெரும் பலத்தை அளித்துள்ளது. 25 அல்லது 26 மக்களவைத் தொகுதிகளை ஒன்றாகக் கைப்பற்ற இக்கூட்டணி உதவும் எனவும் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹாசன், மாண்டியா, பெங்களூரு ஊரகம், சிக்கபல்லாபூர் மற்றும் தும்கூர் ஆகிய தொகுதிகள் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேசமயம், பாஜகவின் சிட்டிங் தொகுதியான சிக்கபல்லாபூரை விட்டுக் கொடுக்க அக்கட்சி தயக்கம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா வந்தடைந்தார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

ஆனால், இரு கட்சிகளின் தலைவர்களும் பரஸ்பரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் முழு அளவிலான கூட்டணியாக இது இருக்காது என்று மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கூட்டணி என்று சொல்லாமல் தொகுதி பங்கீடு புரிதல் சென்னால் சிறப்பாக இருக்கும் என்ற்ம் அவர்கள் கூறுகின்றனர். முன்னதாக, மக்களவை தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளம் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் தேவகவுடா அண்மையில் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. 

கர்நாடகாவில் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 25 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும் ஜேடி(எஸ்) கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios