என் மகனை படிக்க வச்சது அஜித் சார் தான்! கையில இருக்குறத அப்படியே கொடுத்துடுவார்.. மாரிமுத்து பகிர்ந்த தகவல்!
இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்த இயக்குனரும் - நடிகருமான மாரிமுத்து, அஜித் செய்த உதவி குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
G Marimuthu passed away
தமிழில் துணை இயக்குனராக தன்னுடைய கேரியரை துவங்கி, கண்ணும் கண்ணும், புலிவால், போன்ற படங்களை இயக்கியதோடு மருது, கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள், முதல் ஜெயிலர் வரை பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி உள்ளவர் மாரிமுத்து. குறிப்பாக வெள்ளித்திரையில் இவருக்கு கிடைக்காத வெற்றியையும், அங்கீகாரத்தையும் பெற்று கொடுத்தது என்றால், அது எதிர்நீச்சல் சீரியல் தான்.
Marimuthu Timing Comedy
பொதுவாக சீரியல்களில் வரும் நெகடிவ் கதாபாத்திரங்களை ரசிகர்கள், வெறுப்பது உண்டு. ஆனால் குணசேகரன் விஷயத்திலோ, இவரின் நெகடிவ் ரோலையும்... சீரியஸாக இருக்கும் போது கூட இவர் அடிக்கும் டைமிங் காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக பல படங்களில் இவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
மாரிமுத்து மரணத்திற்கு ராதிகா முதல் வைரமுத்து வரை கண்ணீருடன் இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்..!
Ethirneechal Marimuthu Death
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இன்று காலை, 'எதிர்நீச்சல்' சீரியலின் டப்பிங் பணியை மேற்கொண்ட போது, திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தார். இவருடைய மரணம் குறித்து, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை, தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலமாகவும்... நேரில் சென்றும் தங்களின் அஞ்சலியை செலுத்தி, அவரின் குடும்பத்தினருக்கு தங்களின் அனுதாபங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது அஜித் குறித்து இவர் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Marimuthu about Ajith
துணை இயக்குனராக மாரிமுத்து இருந்த காலத்தில், தன்னுடைய மகனின் கல்வி செலவுக்கு கூட பணம் கட்ட முடியாத சூழலில் தான் இருந்துள்ளார். அப்படி கஷ்டப்பட்ட காலத்தில் மாரிமுத்து-வின் மகனை 10-ஆம் வகுப்பு வரை அஜித் தான் படிக்க வைத்தாராம். இந்த தகவலை பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது... "அல்டிமேட் சார் அஜித்துக்கும் எனக்கும் நிறைய பந்தம் இருக்கு, நிறைய உறவு இருக்கு. என்னுடைய மகனை 10-ஆம் வகுப்பு வரைக்கும் அவர் தான் படிக்க வைத்தார். பல பேரை நல்ல மனுஷன்னு சொல்லுவாங்க ஆன அவர் உண்மையிலேயே நல்ல மனுஷன். கையில இருக்குறத அப்படியே கொடுத்து விடுவார்"என அஜித் பற்றி மிகவும் உயர்வாக பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.