- Home
- Gallery
- இமயம் சரிந்தது... கடைசியாக தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்த மாரிமுத்து - வைரலாகும் புகைப்படம்
இமயம் சரிந்தது... கடைசியாக தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்த மாரிமுத்து - வைரலாகும் புகைப்படம்
நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த விழா நாயகன் படத்தின் ஷூட்டிங்கில் தனக்காக ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்துள்ளார்.

marimuthu
நடிகர் மாரிமுத்து சின்னத்திரை சீரியலில் நடித்து பேமஸ் ஆனாலும் அவர், சினிமாவில் ஏராளாமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அஜித்தின் வாலி படத்தில் தொடங்கி, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஜெயிலர் வரை எக்கச்சக்கமான படங்களில் நடிகர் மாரிமுத்து குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி உள்ளார்.
G Marimuthu
இவர் நடித்து முடித்துள்ள படங்களும் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக சூர்யா - சிறுத்தை கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் மாரி முத்து சின்ன ரோலில் நடித்திருக்கிறார். இதுதவிர சிறு பட்ஜெட் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... அடிதடிலாம் சீரியல்ல தான்.. நிஜத்தில் மாரிமுத்து உடலை பார்த்து அண்ணா.. அண்ணானு கதறி அழுத எதிர்நீச்சல் குடும்பம்
marimuthu last selfie
அந்த வகையில் நடிகர் மாரிமுத்து நடித்த ஒரு படம் தான் விழா நாயகன். இந்த படத்தின் ஷூட்டிங்கில் தான் மாரிமுத்து கடைசியாக கலந்துகொண்டாராம். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தன்னுடைய புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்தபடி நிற்கிறார் மாரிமுத்து.
ஷூட்டிங் ஸ்பாட்டில் எதர்ச்சியாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இறக்கும் முன்னரே தன்னுடைய புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் மாரிமுத்து நின்று செல்பி எடுத்ததை பார்த்த ரசிகர்கள் படத்துக்காக வைத்தது இப்படி நிஜத்தில் நடந்துவிட்டதே என புலம்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மனைவியின் 25 வருட ஆசை... இறக்கும் முன் நிறைவேற்றிய எதிர்நீச்சல் மாரிமுத்து - கலங்க வைக்கும் சம்பவம்