அடிதடிலாம் சீரியல்ல தான்.. நிஜத்தில் மாரிமுத்து உடலை பார்த்து அண்ணா.. அண்ணானு கதறி அழுத எதிர்நீச்சல் குடும்பம்
எதிர்நீச்சல் சீரியலில் மாரி முத்து உடன் நடித்த சக நடிகர்கள் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
Ethirneechal Marimuthu
எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவின் மரணம் சின்னத்திரை நடிகர், நடிகைகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் எதிர்நீச்சல். இதில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்துவின் கேரக்டருக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இதனால் தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமையும் இந்த சீரியலை ஒளிபரப்பினர். அந்த அளவுக்கு எதிர்நீச்சல் சீரியலுக்கு மவுசு இருந்தது.
ethirneechal serial actors
யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை. இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நடிகர் மாரிமுத்து மரணமடைந்தார். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்ட அவருக்கு தற்போது தான் சின்னத்திரை மூலம் ஒரு அங்கீகாரம் கிடைத்த நிலையில், அதற்குள் அவரின் மரணம் அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாது சின்னத்திரைக்கும் மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... கடைசி வரை நிறைவேறாமல் போன மாரிமுத்துவின் ஆசை! கனவு இல்லத்தில் ஒரு நாள் கூட வாழாமல் உயிர்விட்ட சோகம்!
ethirneechal haripriya
சீரியலில் வில்லனாக மிரட்டினாலும், ரியல் லைஃபில் மிகவும் ஜாலியான மனிதராகவே மாரிமுத்து பழகி வந்துள்ளார். இதனால் சீரியலில் இவருடன் நடித்த சக நடிகர், நடிகைகளும் அவரை தங்கள் அண்ணனாகவே பார்த்து வந்துள்ளனர். மாரி முத்துவின் மறைவால் எதிர்நீச்சல் சீரியல் நடிகர்களும் மனமுடைந்து போயினர். இன்று காலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவர்கள் அனைவரும் மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.
ethirneechal madhumitha
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் அம்மாவாக நடித்தவர் அவரது உடலை பார்த்ததும் குணசேகரா... குணசேகரா என கதறி அழுதது அனைவரையும் மனமுடையை செய்தது. பின்னர் ஹரிபிரியா மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் மாரிமுத்துவின் மனைவியிடம் கண்கலங்கியபடி ஆறுதல் சொல்லினர். முக்கியமாக எதிர்நீச்சல் சீரியல் நாயகி மதுமிதா ஏங்கி ஏங்கி அழுதது அங்கிருந்தவர்களை கலங்க செய்தது.
இதையும் படியுங்கள்... மனைவியின் 25 வருட ஆசை... இறக்கும் முன் நிறைவேற்றிய எதிர்நீச்சல் மாரிமுத்து - கலங்க வைக்கும் சம்பவம்