MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தங்கச்சியை லவ் பண்றேன்னு சொல்லி கர்ப்பமாக்கிவிட்டு கல்யாணத்துக்கு மறுத்ததால் கொன்றேன்! அண்ணன் பகீர்வாக்குமூலம்

தங்கச்சியை லவ் பண்றேன்னு சொல்லி கர்ப்பமாக்கிவிட்டு கல்யாணத்துக்கு மறுத்ததால் கொன்றேன்! அண்ணன் பகீர்வாக்குமூலம்

கோவையில் தங்கையை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் கொன்றேன் என அண்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 02 2024, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Child Girl Pregnancy

Child Girl Pregnancy

கோவை மாவட்டம் இருகூர் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (23). இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், காமாட்சி புரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ஜெயச்சந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.  அடிக்கடி இருவரும் வெளியில் சுற்றிவந்துள்ளனர். மேலும், 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Refusal Marriage

Refusal Marriage

இதனை அறிந்த சிறுமியின் அண்ணன் சுருளி (எ) சுரேந்திரன் (28) அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் ஜெயச்சந்திரனை சந்தித்து தனது தங்கையை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் ஜெயச்சந்திரன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுரேந்திரன் கடந்த 26ம் தேதி  ஜெயச்சந்திரனிடம் நைசாக பேசி பெட்ரோல் பங்க்கில் இருந்து இருசக்கர வாகனத்தில் தடாகத்திற்கு அழைத்து சென்றார். 

இதையும் படிங்க: முட்டை தோசை கேட்ட கணவர்.. கடைக்கு வாங்க சென்ற மனைவி.. சைடு கேப்பில் ரவுடியை கொத்துக்கறி போட்ட கும்பல்!

34
Coimbatore Crime News

Coimbatore Crime News

அங்கு சுரேந்திரனின் நண்பர்கள் ஜெயராஜ், அஜித், நவீன், கார்த்திக் ஆகியோர் ஜெயச்சந்திரனிடம், சுரேந்திரனின் தங்கையை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளனர். ஆனால் ஜெயச்சந்திரன் தன்னால் சுரேந்திரனின் தங்கையை திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் சவுக்கு கட்டையால் ஜெயச்சந்திரனை கடுயாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயங்களுடன் ஜெயசந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க:  சென்னையில் பயங்கரம்!பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! நேரில் பார்த்த பொதுமக்கள்! அலறியடித்து ஓட்டம்!

44
Police Arrest

Police Arrest

இதுகுறித்து ஜெயச்சந்திரனின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுரேந்திரன் உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி தங்கையை ஜெயச்சந்திரன் கர்ப்பமாக்கியுள்ளார். இதனால் தங்கையை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். ஆனால், அவர் மறுத்துள்ளார். ஜெயச்சந்திரன் ஏற்கனவே 2 பெண்களை காதலித்து வந்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த நான் நண்பர்களுடன் சேர்ந்து அவரை தாக்கியதில் உயிரிழந்ததாக கூறியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved