கடைசி வரை நிறைவேறாமல் போன மாரிமுத்துவின் ஆசை! கனவு இல்லத்தில் ஒரு நாள் கூட வாழாமல் உயிர்விட்ட சோகம்!
27 வருடமாக வாடகை வீட்டில் இருந்த குணசேகரன், இன்னும் ஓரிரு மாதத்தில் சொந்த வீட்டில் குடியேற இருந்த நிலையில், அந்த வீட்டில் ஒரு நாள் கூட வாழாமல் உயிரிழந்துள்ள சோகம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
Ethirneechal marimuthu death
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வரும் மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பு காரணமாக தன்னுடைய 57 வயதில் உயிரிழந்தார். இவர் மறைவுக்கு பின்னர் இவர் பற்றிய பல தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தன்னுடைய கனவு இல்லம் குறித்து பேட்டி ஒன்றில் இவர் கூறியுள்ள தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
Director Marimuthu
துணை இயக்குனராக கவனம் பெற்ற இயக்குனர் மாரிமுத்து, பின்னர் திரை உலகில் இயக்குனராகவும் அறிமுகமானார். இவரின் துரதிஷ்டம் இவர் இயக்கிய 'கண்ணும் கண்ணும்' மற்றும் 'புலிவால்' ஆகிய படங்கள் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. எனினும் கண்ணும் கண்ணும் படத்தில் இடம்பெற்ற கிணத்த காணும் காமெடி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. அதே போல் புலிவால் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாரிமுத்து இறப்பு அதிர்ச்சியளிக்கிறது! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்!
Ethirneechal Marimuthu Dream
திரை உலகில் இவருக்கு கிடைத்திராத அங்கீகாரத்தையும், புகழையும் பெற்று தந்தது என்றால் அது எதிர்நீச்சல் சீரியல்தான். எதிர்நீச்சல் சீரியலில் ஆணாதிக்கம் கொண்ட ஒருவராக குணசேகரன் கதாபாத்திரத்தில்
நடித்து வருகிறார். ஆனால் உண்மையில் இவர் பெண்களுக்கு அதிகம் மரியாதை கொடுக்கும் நபராம். இந்த சீரியலில் 20 ஆயிரம் சம்பளத்தில் நடிக்க துவங்கி, தற்போது இந்த தொடரில் அதிக சம்பளம் வாங்கும் நபராக உயர்ந்துள்ளார் மாரிமுத்து. மேலும் இவரை பிற சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க வைக்க இயக்குனர்கள் பலர் போட்டி போட்டு வருகின்றனர்.
Marimuthu Dream House
மெல்ல மெல்ல தன்னுடைய ஏழ்மையை வென்று, முன்னணி இடத்தை நோக்கி முன்னேறியுள்ள மாரிமுத்து கடந்த 27 வருடமாக வாடகை வீட்டில் தான் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். எனவே இவருடைய கனவு என்பது சொந்த வீட்டில் தன்னுடைய குடும்பத்துடன் வசிக்க வேண்டும் என்பது. சமீபத்தில் தன்னுடைய மனைவியுடன் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சொந்த வீடு கனவு குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது "திருமணம் ஆகி 27 ஆண்டுகளில்... பல வாடகை வீட்டில் வசித்துள்ளோம். ஆனால் இப்போது சொந்த வீடு கனவு நிஜமாகியுள்ளது. பொதுவாக வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் பெரும் கனவு என்பது சொந்த வீடு தான். அந்த கனவு தற்போது என் வாழ்வில் நிறைவேறிவிட்டது. மணப்பாக்கம் பகுதியில் எங்களுக்கு சொந்தமாக ஒரு பெரிய வீடு, எங்களின் கனவு வீட்டை வாங்கி உள்ளோம். அந்த வீட்டிற்கு என் மனைவியின் பெயரான மலர் என்பதை தான் சூட்ட முடிவு செய்துள்ளோம்.
Not Fulfilled Marimuthu Dream
இப்போது வாங்கி இருக்கும் வீட்டின் பிளான் படத்தை ஒட்டி வைத்து, தினமும் அதை பார்த்து ஏதேனும் மாற்றங்கள் செய்து அதை இன்ஜினியரிடம் சொல்லி எங்களுக்கு பிடித்தது போல் மாற்றி வருகிறேன். விரைவில் அந்த வீட்டிற்கு செல்ல உள்ளோம் என்பதையும் தெரிவித்திருந்தார். இந்த வீட்டின் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்ட நிலையில், இன்னும் ஓரின மாதங்களில் அந்த வீட்டில் குடியேறவும் மாரிமுத்து முடிவு செய்திருந்தார். ஆனால் அந்த கனவு நிறைவேறுவதற்கு முன்பாகவே அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.