Asianet News TamilAsianet News Tamil

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார்.
 

pt usha all set to become first woman president of indian olympic association
Author
First Published Nov 28, 2022, 11:38 AM IST

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 10ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 27ம் தேதி தான் கடைசி நாள்.  

அந்தவகையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா போட்டியிடுகிறார். கேரளாவை சேர்ந்த 58 வயதான பி.டி.உஷா, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளன்று தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

FIFA World Cup 2022: அபாரமாக ஆடிய குரோஷியா, 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி மாபெரும் வெற்றி

தடகள வீரர்கள், தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததாக பி.டி.உஷா தெரிவித்துள்ளார். 

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், இந்த பதவிக்கு போட்டியின்றி தேர்வாகிறார் பி.டி.உஷா. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெறுகிறார் பி.டி.உஷா.

FIFA World Cup 2022: உலக கோப்பையில் மாரடோனாவின் சாதனையை சமன் செய்த லியோனல் மெஸ்ஸி

தலைவர், துணைத்தலைவர், செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios