HMD Phones : Nokia போன்களை தயாரித்த HMD.. இந்திய சந்தையில் தன் போன்களை களமிறக்குகிறது - ஸ்பெக் & விலை இதோ!

HMD Global Phones : பிரபல நோக்கியா செல் போன்களை தயாரித்த HMD Global நிறுவனம், தனது HMD போன்களை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Nokia phone Manufacturers HMD Global introducing HMD Smart Phones in india see spec an price ans

ஒரு காலத்தில் புகழின் உச்சியில் பயணித்து வந்த நோக்கியா நிறுவன ஃபோன்களை தயாரித்து புகழ்பெற்ற நிறுவனம் தான் HMD Global. இன்றளவும் அந்த ஃபோன்களை தயாரிப்பதற்கான லைசன்ஸ் இந்த நிறுவனம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அண்மையில் அந்நிறுவனம் தங்களுடைய பெயரில் புதிய போண்களை அறிமுகம் செய்ய தொடங்கியது. தற்பொழுது அந்த நிறுவனம் இந்தியாவிலும் தங்களது ஃபோன்களை அறிமுகம் செய்ய உள்ளது. 

அண்மையில் HMD நிறுவனம் உலக அளவில் தனது HMD Pulse, HMD Pulse Plus மற்றும் HMD Pulse Pro ஆகிய போன்களை அறிமுகம் செய்தது. ஆகவே அந்த போன்கள் தான் இந்திய சந்தையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனம் வெளியிட்ட தனது X பக்க பதிவில் அதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் எந்த போன் வெளியாகும் என்று அறிவிக்கவில்லை. 

ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவு தான்.. கம்மி விலையில் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் பிரிட்ஜ்கள் இவைதான்..

இந்தியாவில் முதல் எச்எம்டி பிராண்டட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதில் Unisoc T606 சிப்செட், 50MP கேமரா மற்றும் 20W வேகமாக சார்ஜிங் ஆகிய அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் HMD நிறுவனம் நடத்தும் ஒரு போட்டியில் பங்கேற்பவர்களுக்கு இந்த போனை வெல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.

 
HMD நிறுவனம் இந்திய சந்தையில் என்ன போனை வெளியிடவுள்ளது என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்தியாவில் தங்கள் முதல் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்துவது எங்களுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தோராயமாக இந்திய சந்தையில் 13,000 முதல் 15,000 என்ற விலையில் HMD போன்கள் அறிமுகமாகலாம். 

அடேங்கப்பா! இன்வெர்ட்டரையே மிஞ்சும் பவர் பேங்க்! அசத்தும் ஆம்பிரேன் PowerHub 300!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios