மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் தொடக்க சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால் மற்றும் ஹாங்காங்கின் ஐப் பியு யின் மோதினர்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 21-12, 21-16 என்ற செட் கணக்கில் ஐப் பியு யின்னை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார் சாய்னா. 

மொத்தம் இந்த ஆட்டம் 42 நிமிடங்களில் நடைப்பெற்றது. இதில் சாய்னா பெற்ற வெற்றி அனைவராலும் பாராட்டப் பெற்றது. 

இந்த பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் சாய்னா, ஜப்பானின் அகேன் எமகாச்சியை எதிர்கொள்கிறார்.