தோனி, கோலி யாரும் கிடையாது – 9ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் ரோகித் சர்மா!
ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் 9ஆவது டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதன் மூலமாக ரோகித் சர்மா அதிக முறை டி20 உலகக் கோப்பையில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.
India New T20 World Cup Jersey
ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், கனடா, உகாண்டா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
New T20I Jersey
இந்த 20 அணிகளும் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் 30 அம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.
Virat Kohli New T20I Jersey
மேலும், ரிசர்வ் பிளேயர்ஸாக ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் ஏதேனும் மாற்றம் செய்ய நேர்ந்தால் மே 25 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
Rohit Sharma T20I New Jersey
இந்த தொடரில் ரோகித் சர்மா விளையாடுவதன் மூலமாக 9ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார். முதல் முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடினார். இதில், விராட் கோலி கூட விளையாடவில்லை. ரோகித் சர்மா தனது 20ஆவது வயதில் டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.
Team India New T20I Jersey
அடுத்து 2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். மேலும், 2010, 2012, 2014, 2016, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்று விளையாடியுள்ளார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.
T20 World Cup 2024 anthem
இந்த தொடருக்கான இந்திய அணி ஜெர்சி நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்கான ஜெர்சியுடன் போட்டோஷூட் எடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.