MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • CWC Season 5 Salary: 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

CWC Season 5 Salary: 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவி கடந்த மாதம் துவங்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 10 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

2 Min read
manimegalai a
Published : May 07 2024, 10:23 PM IST| Updated : May 07 2024, 10:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Cook with comali show

Cook with comali show

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒரு சமையல் நிகழ்ச்சி மூலமாக கூட ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்த நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. 2019-ஆம் ஆண்டு துவங்க பட்ட நிகழ்ச்சியின் முதல் சீசன் சுமாரான வரவேற்பை பெற்றாலும், இரண்டாவது சீசன் அல்டிமேட் வெற்றி பெற்றது.

28
Cook with Comali 5 Atrocities

Cook with Comali 5 Atrocities

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், போட்டியாளர்களை விட... அவர்களுக்கு உதவி செய்ய கொடுக்கப்படும் கோமாளிகள் தான். புகழ், பெண் போட்டியாளர்களை சுற்றி சுற்றி வந்து ஜொள்ளு விட்டே... காமெடி செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது மட்டும் இன்றி, பல படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

குழந்தைகள் விஷயத்தில் சவால் விட்டு சிக்கிய எழில்.! அசிங்கப்பட்டது தான் மிச்சம்.. நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

38
cook with comali Season 5

cook with comali Season 5

 ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரி இவர் ஒவ்வொரு சீசனிலும் காமெடி செய்து வருவது ரசிகர்களுக்கு சற்று வெறுப்பை வர வைத்துள்ளது. பழைய ஜோக்கையே வைத்து பழைய கோமாளிகள் ஒப்பேற்றி வரும் நிலையில்... இம்முறை புதிய நடுவரோடு சேர்த்து, சில புதிய கோமாளிகளையும் களமிறக்கி உள்ளது புதிய குக் வித் கோமாளி டீம்.
 

48
Vijay tv Pugazh

Vijay tv Pugazh

முதல் வாரம், குக்கள் முதல் கோமாளிகள் வரை அனைவருமே சற்று சொதப்பிய நிலையில்.. இந்த வாரம், காமெடிக்காக அதிகமாக பேக் வாய்ஸ் போட்டே ஒப்பேத்தியது போல் இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். 

மதத்தை கடந்து காதல் திருமணம்.! மாமியாருக்காக ராஜ்கிரண் செய்த மிகப்பெரிய விஷயம்... நெகிழ வைக்கும் உண்மை!
 

58
Cook with comali Contestants Salary

Cook with comali Contestants Salary

இது ஒருபுறம் இருக்க, குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில்... கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தி வரும், போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

68
TTF Vasan Lover Zoya

TTF Vasan Lover Zoya

அதன் படி, TTF வாசனின் காதலியாக அறியப்படும் ஷாலின் சோயா ஒரு எபிசோடுக்கு ரூ. 10,000 வாங்குவதாக கூறப்படுகிறது. அதே போல் ஜீ தமிழ் சீரியல் நடிகர் அக்ஷய் கமலும் ஒரு எபிசோடுக்கு ரூ. 10,000 வீதம் பெறுகிறார். இவரை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர் வசந்த் வஷி ஆகியோரும் ரூ.10,000 ஒரு எபிசோடுக்கு பெறுகிறார்கள்.

Selvaraghavan: தனுஷே அடிவாங்குவான்..! செல்வராகவனை பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க... பிரபலம் கூறிய தகவல்!
 

78
Divya Duraisamy Salary

Divya Duraisamy Salary

இவர்களை தொடர்ந்து, செய்திவாசிப்பாளராக இருந்து சமீபத்தில் கதாநாயகியாக அவதாரம் எடுத்துள்ள திவ்யா துரைசாமி ஒரு நாளைக்கு ரூ. 12,000 சம்பளமாக பெறுகிறார், அதே போல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமாகி தற்போது சமையலில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வரும் பூஜா வெங்கட் ஒரு எபிசோடுக்கு ரூ.9,000 பெறுகிறார். இவர் தான் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மிகவும் குறைவான சம்பளம் வாங்கும் பிரபலம்.

88
Priyanka and sujitha high salary contestant

Priyanka and sujitha high salary contestant

பிரபல யூ டியூபர் இர்ஃபான் மற்றும் காமெடி நடிகர் விடிவி கணேஷ் ஆகியோர் ஒரு எபிசோடுக்கு 15,000 வீதம் பெறுகிறார்கள். இவர்களை தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்களான நடிகை சுஜிதா மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் ஒரு எபிசோடுக்கு ரூ.18,000 வாங்குகின்றனர். இவர்கள் தான் இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர்களாக அறியப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா - வைரமுத்து மோதல்.. தளபதியின் அரசியல் என்ட்ரி குறித்த கேள்வி! ராகவா லாரன்ஸ் பதில் இதுதான்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved