MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மதத்தை கடந்து காதல் திருமணம்.! மாமியாருக்காக ராஜ்கிரண் செய்த மிகப்பெரிய விஷயம்... நெகிழ வைக்கும் உண்மை!

மதத்தை கடந்து காதல் திருமணம்.! மாமியாருக்காக ராஜ்கிரண் செய்த மிகப்பெரிய விஷயம்... நெகிழ வைக்கும் உண்மை!

ராஜ்கிரண் தன்னுடைய மனைவியின் காதலுக்காகவும், அவரின் மாமியார்ஆசைக்காகவும் செய்துள்ள ஒரு விஷயம் குறித்த தகவலை சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் முதல் முறையாக கூறியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : May 07 2024, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ராமராஜன் நடிப்பில், கடந்த 1988-ஆம் ஆண்டு டி.கே.போஸ் இயக்கத்தில் வெளியான 'ராசாவே உன்னை நம்பி' என்கிற படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராக திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் ராஜ்கிரண். இதை தொடர்ந்து சிராஜ் இயக்கத்தில், 'என்ன பெத்த ராசா' என்கிற படத்தை தயாரித்தது மட்டும் இன்றி ஹீரோவாகவும் களமிறங்கினார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார்.
 

26

இவரை ஹீரோவாக நடிக்க வைக்க பலர் போட்டி போட்ட நிலையில், அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான் போன்ற படங்களை இயக்கி, தயாரித்து , ஹீரோவாகவும் நடித்தார். இப்படி இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று... ராஜ்கிரணை முன்னணி நடிகராக உயர்த்தியது. தன்னுடைய இளமை பருவத்தில் இருந்தே அனைவருக்கும் உதவும் மனம் படைத்தவர் ராஜ்கிரண். உச்சத்தில் இருந்த போது, தன்னுடன் இருந்த அனைவருக்கும் வாரி வழங்கி அழகு பார்த்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இவர் கஷ்டப்படும் நிலை வந்ததும் இவரை விட்டு அனைவருமே விலகி விட்டனர். ஆனால், இவர் ஆசை ஆசையை காதலித்த பெண் ஒருவர் மட்டுமே உடன் நின்றார்.

இளையராஜா - வைரமுத்து மோதல்.. தளபதியின் அரசியல் என்ட்ரி குறித்த கேள்வி! ராகவா லாரன்ஸ் பதில் இதுதான்!
 

36

ராஜ்கிரண் ஒரு இஸ்லாமியர் என்றாலும்... கடவுள் ஒருவனே என்கிற கோற்பாட்டுடன்  அணைத்து கடவுளையும் வழிபடுபவர். அந்த வகையில்... இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை தான் காதலித்து தன்னுடைய மதத்தின் படி திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரணுக்காக அவரின் மனைவியும் தன்னுடைய பெயரை கதீஜா நாச்சியார் என மாற்றிக்கொண்டார்.

46

ராஜ்கிரண் பொதுவாக தன்னுடைய குடும்பத்தின் மீது கேமராவின் நிழல் பட அனுமதித்தது இல்லை. ஆனால் சமீபத்தில், பிரபல தனியார் ஊடகம் நடத்திய நிகழ்சியில் கலந்து கொண்டது மட்டும் இன்றி, பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்த பேட்டியில்... 75 வயதிலும் ராஜ்கிரண் தன்னுடைய மனைவி மீது வைத்திருக்கும் அளவு கடந்த காதலை பார்பவர்களாலேயே உணர முடிந்தது.

Selvaraghavan: தனுஷே அடிவாங்குவான்..! செல்வராகவனை பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க... பிரபலம் கூறிய தகவல்!

56

இவருக்கு ஏற்ற போல் கதீஜா நாச்சியாரும் விட்டு கொடுத்து... புரிதலோடு இத்தனை வருடங்கள் வாழ்ந்ததாக கூறினார். வீட்டில் ராஜ்கிரண் மிகவும் கண்டிப்பானவர் என்றும்... அதே நேரம் சரியான விஷயங்களுக்கு என்றுமே அவர் நோ சொல்வது இல்லை என்றும் பேசி இருந்தார் அவரின் மனைவி. கதீஜா நாச்சியாரின் அம்மாவுக்கு தற்போது 100 வயதுக்கு மேல் ஆகும் நிலையில், அவர் மிகவும் சாமி பக்தி உடையவர் என்பதால் அவருக்காக தான்  வீட்டில் பிரமாண்ட கோவில் ஒன்றையும் கட்டி கொடுத்துள்ளார். இந்த தகவல் கேட்பவர்களையே ஆச்சர்யப்பட செய்துள்ளது.

66

தன்னுடைய மகள் பற்றி ராஜ்கிரண் கூறும் போது, அவருக்கு வெளியுலகம் பற்றி எதுவும் தெரியாமல் வளர்த்து விட்டேன் அதனால் அவர் ஏமார்ந்து விட்டார். இப்போது மீண்டும் என்னிடம் வந்துவிட்டார் என மகளை மன்னித்து ஏற்று கொண்டது குறித்தும் பேசியுள்ளார். இறுதியில் ராஜ்கிரண் மனைவிக்கு மெடல் மற்றும் இவர்களின் குடும்ப போட்டோ ஒன்று பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Janhvi Kapoor: ஹைடெக் கவர்ச்சி.. உடல் ட்ரான்ஸ்பரென்ட்டாக தெரியும் உடை.. குயின் கிளியோபாட்ராவாக மாறிய ஜான்வி !

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved